‘இனவெறி பிடித்த காடையர்களால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான நடவடிக்கையை மிக வண்மையாக கண்டிக்கின்றேன்’ – சிப்லி பாரூக்

sibly farook– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் அளுத்கம தர்கா நகர் மற்றும் அயல் கிரமாங்களில் நேற்று மிக மோசமாக இடம்பெற்ற இனவெறி பிடித்த காடையர்களால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான நடவடிக்கையை மிக வண்மையாக கண்டிக்கின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

இவ்வளவு காலங்கலாக பள்ளிகளை உடைப்பதும், ஹலாலுக்கெதிராக பேசுவதும், பர்தாக்களை கழற்ற முயற்சிப்பதும், தொப்பி அணிந்த முஸ்லிம்களை கேலி செய்வதும், முஸ்லிம்களுடைய பொருளாதாரத்தை அபகரிக்கும் நோக்கில் அந்த வியாபார ஸ்தாபனங்கள் மீது தாக்குதல் நடாத்துவதும் தொடர்ந்தேர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆனால் நேற்று இடம்பெற்ற மோசமான காட்டுமிராண்டித்தனமான செயல்களை இன்னும் பொறுத்துக் கொண்டு வாய் மூடிகளாக இருந்து செயற்படுவதென்பது, எந்த சமூகத்தினுடைய பாதுகாப்பும் அதனுடைய கௌரவமும் அதனுடைய பொருளாதாரமும் அதiனுடைய மானமும் அதனுடைய இரத்தங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்குமென நம்பி பொறுமையாக செயற்பட்டுக் கொண்டிருந்தோமோ அது இல்லாது போகுமளவுக்கு அந்தநடவடிக்கைகள் அமைந்திருந்தன.

ஆனால் ஒரு தலைப்பட்சமாக நேற்று மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்டு பாதுகாப்பு துறையினர் இருக்கத்தக்கதாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதாக கூறி முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி வைத்து விட்டு அவர்களுடைய உடமைகளையும் அவர்களுடைய உயிர்களையும் வெறியாட்டம் ஆடியது என்பதை இந்த சமூகத்தில் அரசியல் அந்தஸ்து பெற்று அல்லது எந்தவொரு தலைமைத்துவத்திற்கோ பொறுமையாக இதனை சகிக்க முடியாத அளவிற்கு ஓர் நிலைமையை உருவாக்கி பலவந்தமாக அந்த நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

இனிமேல் இந்த சமூகத்தினுடைய அரசியல் தலைமைகள் வெறுமனே தங்களது சுயலாப அரசியலுக்காக தங்களுக்குள்ளே பிளவுபட்டு இந்த சமூகத்தை இவ்வாரானதொரு ஓர் இரத்தக் கரையிலே புறட்டுவதற்கு இடமளிக்கக்கூடாது.பதவி பட்டம் என்பது எங்களது நம்பிக்கையின்படி இறைவன் கொடுப்பதும் அதை இறைவன் எடுப்பதுமாகும் ஆகவே இந்த சமூகத்தினுடைய தலைவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய காலத்தின் தேவைக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். இதனை ஒருமித்த குரலில் இந்த அரசிற்கு ஆதரவளிக்கின்றவர்கள் என்ற வகையில் தட்டிக்கேற்ப்பதற்கு எங்களுக்கு பூரண அதிகாரமிருக்கின்றது.

மக்கள் கொடுத்த ஆணையை அந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது அவர்களை காப்பாற்றுவதற்கு அந்த ஆணையை பயன்படுத்த முடியவில்லை என்றால் நாம் எதற்காக மக்கள் ஆணையை கேட்க வேண்டும். ஏன் எங்களுடைய சமூகத்திற்கு இழகை;கப்படும் அநியாயமான இந்த அநீதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்வதற்கு பாடுபடக் கூடாது.

இறைவன் இதனை சோதனையாகவே எங்களுக்கு தந்தள்ளான் என நாங்கள் நம்புகிறோம் இதில் பொறுமை காக்க வேண்டியது எங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் அதற்காக அநீதிக்கெதிராக குரல் கொடுக்காமல் இருக்கும்படி இஸ்லாம் ஏவவில்லை. அதே நேரம் அது கோழைத்தனமாக இருக்கும்படியும் சொல்லவில்லை. இஸ்லாமியப்பார்வையிலும் சரி லௌகீக பார்வையிலும் சரி இதனை கேட்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கின்றது ஓர் புனித யுத்ததில் கூட வீணாக ஓர் மரத்தினை வெட்டக்கூடாது என இஸ்லாம் போதிக்கின்றது அந்த தூய இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் என்றவகையிலும் எமது சமூகத்திற்கு மிகப் பாரிய அழிவை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு திட்டமிடப்பட்டு செய்கின்ற சூழ்ச்சியை நாங்கள் முறியடிக்க வேண்டும் கலிமாச்சொன்ன ஒவ்வொருவரையும் பாதுகாப்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வே அன்றி வேறு யாருமில்லை எங்களது ஈமானை நாம் பலப் படுத்துவோம் இறைவனிடம் இறைஞ்சுவோம் முடியுமானால் எமது சமூகத்திற்காக, பாதுகாப்பிற்காக தொடர்ச்சியாக நோன்பு நோற்போம் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓட்டிய பிரபாகரனின் செயலுக்கு முள்ளிவாய்க்காலில் இறைவன் முற்றுப்புள்ளி வைத்தான் அதற்கு மிகப்பெரிய காரணம் 1990களில் முஸ்லிம்களுக்கெதிராக அவர் வீணாக ஓட்டிய இரத்தமும் அதற்க்கெதிராக செய்யப்பட்ட துஆக்களும், பிரர்த்தனைகளுமேயாகும். எங்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு ஆயுதம் வானத்தின பால் தலையை உயர்த்தி இரு கைகலையும் தோலுக்கு மேலே உயர்த்தி இறைவனிடம் மன்றாடுவதைத் தவிர வேறு ஏதும் வழியில்லை.

அரசாங்காத்துடன் இணைந்திருப்பது என்பதன் கருத்து சமூகத்தை தரை வார்த்துக் கொடுத்து விட்டு தலை சாய்த்து சேவகம் செய்வது என்ற அர்த்தமில்லை. சமூகப்பாதுகாப்பு, சமூக நலனுக்காக அரசுடன் சேர்ந்து செயற்பட வேண்டுமே அன்றி முஸ்லிம் தலைமைகள் தங்களது நிலைப்பாட்டினை ஒன்றினைந்த குரலில் இதனை எடுத்தச் சொல்ல வேண்டும். எல்லாவற்றிற்கும் இறைவன் போதுமானவன் எமது சக்திக்குட்பட்ட அளவிற்கு நாங்கள் முஸ்லிம் சமூகம் கலிமா சொன்னவர்கள் என்ற ஒரே ஒரு கோட்பாட்டின் கீழ் ஒன்றுபடுவோம். எல்லாவிதமான அரசியல் வேறுபாடுகள் இயக்க வேறுபாடுகள் எல்லாவற்றையும் களைந்து விட்டு ஒன்றுபடுவோம்.

ஒற்றுமை என்ற கயிற்றை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் என்ற இறைவசனத்தில் நம்பிக்கை வைத்து இந்த அநீதிக்கெதிராக குரல் கொடுப்போம். மேலும் நாங்கள் மிகப்பொறுமையாக இந்த நிலமையை சமாளித்து மேலும் இது வேறு இடங்களில் பரவாமல் நிதானமாக இருப்பதன் ஊடாக இதைவிட பாரிய அழிவில் இருந்து எமது சமூகத்தை பாதுகாத்து எமது எதிரிக்கு பாடம் புகட்டுவோம். இன்னழ்ழாஹு மஅஸ்ஸாபிரீன் (பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கின்றான்) என்று அவர் விடுத்துத்துள்ள கண்டன அறிக்கையில மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by

One response to “‘இனவெறி பிடித்த காடையர்களால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான நடவடிக்கையை மிக வண்மையாக கண்டிக்கின்றேன்’ – சிப்லி பாரூக்”

  1. I do respect and congratulate for the timely bold comment at this very urgent n needy situation of our community

Leave a comment