உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் பெரும் பணக்கார வீரர் யார் தெரியுமா?

Ronaldo_1769144a[1]– S-90

லண்டன்:  பீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் விளையாடவிருக்கும் வீரர்களில் போர்த்துக்கலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் பெரும் பணக்காரர் ஆவார். பீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் நாளை துவங்குகிறது.

இந்நிலையில் வெல்த் எக்ஸ் என்ற நிறுவனம் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வீரர்களில் பெரும் பணக்காரர்கள் 10 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் போர்த்துக்கள் நாட்டைச் சேர்ந்தவரும், ரியல் மெட்ரிட் அணி வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 230 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். ரொனால்டோ, அர்ஜென்டினா வீரர் லயனல் மெஸ்ஸி மற்றும் இங்கிலாந்தின் வேய்ன் ரூனியை விட பணக்காரர் ஆவார்.

உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வீரர்களில் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்களில் அதிகமானோர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். இந்த பட்டியலில் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரேயொரு வீரரின் பெயர் மட்டுமே உள்ளது. அவர் தான் பெர்னாண்டோ டொரிஸ். அவரின் சொத்து மதிப்பு 50 மில்லியன் டொலர் ஆகும்.அந்த பட்டியலில் போட்டியை நடத்தும் பிரேசிலைச் சேர்ந்த ஒரு வீரரின் பெயர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை  ஆரம்பமாகும் உலகக் கிண்ணப் போட்டியில் 32 அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி வரும் ஜூலை மாதம் 13ம் தேதி வரை நடைபெறும்.

 

Published by

Leave a comment