இருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இன்றிரவு பிரேசிலில் கோலாகளமாக ஆரம்பமாகிறது

world fifa  cup 2014பல சுவாரஸ்ய தகவல்களுடன்…  MJ

ரியோ: சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (FIFA) இருபதாவது கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர், இன்றிரவு பிரேசிலில் கோலாகளமாக இடம்பெறுகிறது. 8 குழுக்கள், 32 நாடுகள், 64 போட்டிகள் என இவ்வுலகக் கிண்ணத் தொடர் வழமை போன்றே இடம்பெறுகிறது.

ஆரம்ப வைபவமும், உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியும் எரினா கொரிண்டியன்ஸ், சா போலோ மைதானத்தில் இன்று மாலை இடம் பெறுகிறது. இவ்வைபவங்கள் இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணியிலிருந்து இடம்பெறும்.

முதலாவது போட்டி பிரேசில் மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கிடையில் இதே மைதானத்தில் இடம்பெறுகிறது. இம் மைதானம் 61,606 பார்வையாளர்களைக் கொள்ளலவாகக் (Capacity) கொண்டது.

0x600[1]

பிரேசிலில் ஏற்பட்டிருக்கும் உள்ளுர் கலகங்களால் பாரிய அச்சுறுத்தல்கள் இவ்வுலகக் கிண்ணப் போட்டிக்கு இன்று வரைக்கும் இருக்கின்றன. பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் இவ்வுலகக்கிண்ணத் தொடர் இடம்பெறுகின்றன.
உள்ளுர் மற்றும் வெளிநாட்டு வீரர்களின் தங்குமிடங்கள், பயிற்சி முகாம்கள் என்பன பலத்த பாதுகாப்பு வேலிகளால் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன.

1930 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்றுவரும் உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரானது, இரண்டாவது தடவையாக பிரேசில் நாட்டில் இடம்பெறுகிறது. 1950ம் ஆண்டு பிரேசில் உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்தி இருந்தது. இவ்விறுதிப் போட்டியில் உருகுவே அணியுடன் பிரேசில் விளையாடி இருந்தது.

brazil (2)

1950 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இறுதிப்போட்டி இடம்பெறவில்லை. முதன்மை புள்ளிகள் பெற்ற 4 கழகங்களில் பிரேசில் மற்றும் உருகுவே தேர்ந்தெடுக்கப்பட்டது. இவ்விரு அணிகளும் இறுதியாக விளையாடிய போட்டி கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி ஏற்கனவே விளையாடிய போட்டியில் 2:1 எனும் கோல் அடிப்படையில் உருகுவே பிரேசிலை வெற்றி பெற்றிருந்ததால், உருகுவே உலகச் சம்பியனாது. இது உதைப்பந்தாட்ட வரலாற்றில் மறக்க முடியாத முதலும், இறுதியுமான சம்பவம் என வர்ணிக்கப்படுகின்றது.

brazil

இதுவரை இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடர்களில் பிரேசில் 5 தடவைகள் ((1958, 1962, 1970, 1994, 2002) உலகக் கிண்ணத்தை வெற்றிபெற்று சரித்திரம் படைத்திருக்கின்றது. இரண்டாம் இடத்தில் இத்தாலி 4 தடவைகளும்,((1934, 1938, 1982, 2006) ஜேர்மனி 3 தடவைகள் ((1954, 1974, 1990) உலகக் கிண்ணத்தை வெற்றிபெற்று 3வது இடத்திலும் இருக்கின்றது.

மேலும், ஆர்ஜன்டீனா (1978,  1986) மற்றும் உருகுவே (1930, 1950) ஆகிய நாடுகள் இரு தடவைகளும், பிரான்ஸ் (1998), இங்கிலாந்து (1966) மற்றும் ஸ்பெய்ன் (2010) ஆகிய நாடுகள் ஒரு தடவையும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியிருக்கின்றன.

1930 இல் இடம்பெற்ற முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் 13 நாடுகளே பங்குபற்றின. அதன் பின்னர் தொடர்ந்து 13 நாடுகளும், இதன் பின்னர் 1978 வரை 16 நாடுகள் பங்கபற்றின. இதன் பின்னர் 1982 ஸ்பெயின் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரிலிருந்து 24 நாடுகள் பங்குபற்றின.1998 பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இன்றுவரைக்கும் 32 நாடுகள் பங்குபற்றுகின்றன.

1990 இல் இத்தாலியில் இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா-ஜேர்மனி அணிகள் மோதின. இறுதிவரை கோல் எவரும் போடாத நிலையில் போட்டியின்; 65 நிமிடத்தில் பெட்ரோ மொன்ஸன் எனும் ஆர்ஜண்டீனா வீரர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

1990 argentina

போட்டியின் 87வது நிமிடத்தில் குஸ்டாவோ டிவிட்டி எனும் மற்றுமொரு ஆர்ஜன்டீனா வீரரும்சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தைவிட்டு வெளியேற்றப்படார். உலகக்கிண்ண வரலாற்றில் இறுதிப்போட்டி ஒன்றில் 9 வீரர்களுடன் போராடிய மரடோனா தலைமையிலான ஆர்ஜண்டீனா, பரிதாபகமாக தோல்வியைத் தழுவியது. இவ்விறுதிப் போட்டி உலகக் கிண்ண வரலாற்றல் மறக்க முடியாதது. இப்போட்டி பல சர்ச்சைகளை அன்று தோற்றுவித்திருந்தன.

இதே போல், 2006 இல் ஜேர்மனியில் இடம்பெற்ற இங்கிலாந்து-போர்த்துக்கள் நாடுகளுக்கிடையிலான போட்டியின் இங்கிலாந்தின் நட்சத்திரம் வேய்னி ரூனி, போட்டியின் 62வது நிமிடத்தில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இப்போட்டி கோல்கள் எதுவுமின்ற சமநிலையில் நிறைவு பெற்றது.

rooney

இதே ஆண்டில், இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், பிரான்ஸ்-இத்தாலி ஆகிய நாடுகள் மோதின.இப்போட்டியின் 110வது நிமிடத்தில், இத்தாலி வீரர் மடராசியை தலையால் முட்டியதற்காக பிரான்ஸ் அணியின் தலைவர் சைன்டீன் சிடான் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியெற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

red zidan

இவ்வாறான சம்பவங்கள் உலகக் கிண்ண வரலாற்றில் இரசிகர்களால் மறக்க முடியாதவை என்பதுடன், இம்முறை இடம்பெறும் பிரேசில் 2014 வெற்றிக்கிண்தை வெற்றிகொள்ளும் நாடு எது என்பதை உலக இரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

கடந்த 2010 உலகக் கிண்ணத்தை நடாத்த தென்னாபிரிக்கவுக்கு 4 பில்லியன் டொலர்கள் செலவானது. 2006 உலகக் கிண்ணத்துக்கு ஜேர்மனிக்கு 6 பில்லியன் டொலர்கள் செலவாகின. ஆனால் 2014 உலகக் கிண்ணத்தை நடாத்த பிரேசிலுக்கு 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகி இருப்பதும் ஒரு வரலாறு!

அதிகமான போட்டிகள் இலங்கை நேரப்படி அதிகாலைப் பொழுதுகளில் ஆரம்பமாகின்றன.

2010 உலகக் கிண்ண இறுதிப்போட்டியை உலகெங்கிலுமிருந்து 619.7 மில்லியன் மக்கள் நேரடியாகப் பார்வையிட்டனர். ஆனால் இம்முறை 715.1 மில்லியன் மக்கள் இவ்விறுதிப் போட்டியைக் காண்பர் என்பதாக ஒளிபரப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Published by

Leave a comment