‘இது ஒரு உண்மைச் சம்பவம். காசுக்காக உயிரை விலைபேசும் ஸ்டெதஸ்கோப் கிறிமினல்கள்தான் இவர்கள்..’
– ஏறாவூர் அபூ பயாஸ்
ஏறாவூர்: சடத்துவ உலகில் முதலாளித்துவ பின்னணியில் மதஒதுக்கல் கல்விக் கொள்கையில் வார்க்கப்பட்டு பண்படுத்தப்பட்ட மருத்துவர்கள் உயிருக்கு விலைபேசும் போக்கையும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளையும்
தங்கள் தொழில் தர்மமாக மாற்றிவரும் யுகத்தில் இன்று அரச பொது மருத்துவமனைகளில் தங்கள் சுயநலன்களை வெளிக்காட்டும் எத்தனையோ சம்பவங்கள் இருக்கிறது.
அவற்றில் ஒன்றுதான் சென்ற சனிக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருபதாம் வாட்டில் இடம் பெற்ற பரிதாபகர மரணத்தின் பின்னணியை மரணமடைந்த ஏறாவூர், காதியார் வீதியை சேர்ந்த ஆசிரியை ரியாஸா உவைசின் மைத்துனரான அப்துல் வாஜி என்பவர் அருமையாகவும் துள்ளியமாகவும் விபரிக்கிறார்.
அவசியம் இதனை வாசித்து பகிரவும். இது ஒரு உண்மைச் சம்பவம். காசுக்காக உயிரை விலைபேசும் ஸ்டெதஸ்கோப் கிறிமினல்கள்தான் இவர்கள்.
ஸ்டதஸ்கோப் கிரிமினல்கள் – அப்துல் வாஜி
இன்று தொழில் நுற்பத்திலும் , கல்வியறிவிலும் சமூகம் வளர்ச்சியடைந்து விட்ட ஒரு காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்மில் அநேகர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் இந்த வளர்ச்சியினை விடவும் மனிதாபிமானத்தையும், இரக்க உணர்வையும் பன்மடங்கு தொலைத்து விட்டிருக்கின்றோம் என்பதனை கவனிக்கத் தவற விட்டிருக்கின்றோம் அல்லது மறந்து விட்டிருக்கின்றோம்.
இரு தினங்களுக்கு முன்பு எனது உறவினரான ஆசிரியை ஒருவரின் மரணம் சம்பந்தமாக எனது முகநூலில் பதிவிட்டிருந்தேன். அவரது மரணத்தின் கடைசி 48 மணி நேரங்களில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த அவருக்கு வைத்தியர்களால் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
கடந்த 5 மாதங்களாக புற்று நோயுடன் போராடிக் கொண்டிருந்த அவர் அடிக்கடி கொழும்புக்கு பிரயாணம் செய்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கின்றார்.
கடந்த வியாழக்கிழமை காலையில் இவர் சுவாசிப்பதற்கு சிரமம் உண்டாகியதைத் தொடர்ந்து ஏறாவூரிலுள்ள அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது சுவாசத் தொகுதியில் நீர் சேர்ந்திருப்பதாகவும் அதனை வெளியகற்றுகின்ற வசதியில்லாமையால் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.
(சுவாசிப்பது கஷ்டமாகும்போது அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று நீரை வெளியகற்றிக்கொள்ளுமாறு இவருக்கு சிகிச்சையளித்து வந்த வைத்தியரும் தெரிவித்திருக்கின்றார்.இதேபோன்று ஏற்கனவே மட்டக்களப்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து நீரை வெளியகற்றிய ஒரு நல்லுள்ளம் கொண்ட வைத்தியர் ஒருவரின் ஆலோசனையின் பேரிலேயே அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். அந்த குறித்த வைத்தியர் தான் அவசரமாக விடுமுறையில் செல்ல வேண்டிய நிலையில் இவரது சிகிச்சைக்கான பொறுப்பை தனது சகாவிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார்)
ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அவரது சுவாசத் தொகுதியிலுள்ள நீரை வெளியகற்றுவதற்கான எதுவித நடவடிக்கைகளையும் அங்கிருந்த வைத்தியர்கள் எடுத்திருக்கவில்லை.’சேலைன்’ கொடுத்து விட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் கொடுத்திருந்த அதே செயற்கை சுவாசத்துடன் நோயாளியை அப்படியே இரண்டு நாட்களாக விட்டு வைத்திருக்கின்றார்கள்.
தவிரவும் அந்தப் பிரிவுக்கு பொறுப்பான வைத்தியர் இ’நான் இங்குள்ள (மட்டக்களப்பு) ஜீ.வீ.(GV தனியார்), ஏறாவூரிலுள்ள கோப் (CO-OP தனியார்) மருத்துவமனைகளில் வைத்தியம் செய்வது உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டிருக்கின்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை மிகவும் சர்வாதிகாரத் தொனியில் ‘தம்மால் வைத்தியம் செய்ய முடியாது எனவும்இநீங்கள் வைத்தியம் பார்த்து வந்த கொழும்புக்கே கொண்டு செல்லுமாறும் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.’
அவர்களது எதேச்சாதிகாரத்துக்குப் பணிந்து நோயாளியை கொண்டு செல்வதற்கு விரும்பிய அவரது கணவரும்இ உறவினர்களும் தாம் கொழும்புக்கு கொண்டு செல்லும் வரையிலாவது நோயாளி சிரமமின்றி சுவாசிப்பதற்காக நோயாளியின் சுவாசத் தொகுதியிலுள்ள நீரை வெளியகற்றி உதவி செய்யுமாறு கெஞ்சியுள்ளனர். ஆனாலும் அந்த வைத்தியர் அதற்கு இணங்கவில்லை.
அன்றிரவு பூராவும் நோயாளி சுவாசிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு போராடியிருக்கின்றார். அவரது உயிர் பிரிவதற்கு ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன்பு இவரது மூச்சுத் திணறல் அதிகமாகிக் கொண்டிருந்தபோது அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது பரிதாபப்பட்ட மருத்துவ மாதுகள் (Nurses) அந்தப் பிரிவுக்குப் பொறுப்பான வைத்தியரை உள்ளகத் தொலைபேசியில் (இன்டர்கொம்) தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவ்வைத்தியர் இணைப்பை வேண்டுமென்றே துண்டிதிருக்கின்றார். இவ்வாறு பல தடவைகள் முயற்சிகள் செய்யப்பட்டபோதும் அவர் தொடர்ந்தும் இணைப்பைத் துண்டித்திருக்கின்றார்.
கடைசியில் அந்த நோயாளி சுதந்திரமாக சுவாசிப்பதற்கு அவருக்கிருந்த உரிமை அந்த ஒரு சில வைத்தியக் கிரிமினல்களால் மறுக்கப்பட்ட நிலையிலேயே மிகவும் அவஸ்தையோடு உயிரை விட்டிருக்கின்றார்.
மரணம் என்பது எல்லோருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுதான்.அதனை வைத்தியராலோ அல்லது வேறு எவராலுமோ தடுத்து விட முடியாதுதான். ஆனால் இந்த நோயாளியின் விடயத்தைப் பொறுத்தமட்டில் அவர் குறித்த நோயினால் மரணிப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பாகவோ அல்லது சில நாட்களுக்கு, வாரங்களுக்கு,மாதங்களுக்கு ஏன் வருடங்களுக்கு முன்பாகவோ வலிந்து உயிரை விட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார். அதனை வேறு வார்த்தையில் சொல்வதானால் கொல்லப்பட்டிருக்கின்றார்.
ஒரு நோயாளி தான் எங்கு? எத்தகைய சூழலில்? சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தெரிவு செய்வதற்கு அவருக்கு உரிமை இருக்கின்றது.அதனடிப்படையில் அமைந்ததே அவர்கள் கொழும்பில் சிகிச்சை பெறுவதற்கு எடுத்துக் கொண்ட தீர்மானம்.
நோயாளிக்கு அவசர நிலைமை ஏற்பட்டு குறித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அந்த வைத்தியர், ‘இவர்கள் தான் காசு உழைப்பதற்கு இருந்த சந்தர்ப்பத்தை வேறு ஒரு வைத்தியருக்கு வழங்கியிருக்கின்றார்கள்..’ என்ற பொறாமையிலும் இ குரோதத்திலும் நோயாளியை குரூரமாக தண்டித்திருக்கின்றார்.
அரச மருத்துவமனை என்பது எந்த ஒரு வைதியரினதும் தனியுரிமைச் சொத்து அல்ல. அங்கு கடமையாற்றும் வைத்தியர்களுக்கு அவர்களது கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பான கோவைகள் இருக்கின்றன. அதற்கமைவாக அவர்கள் இலங்கை நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் சேவையாற்ற வேண்டியது அவர்களது கடமையாகும்.
இன்று வைத்திய சேவைக் கடைகள் நடாத்தும் வைத்திய வியாபாரிகள் மலிந்து விட்ட காலத்தில் அவர்களது வியாபார Promotion க்கு அரச மருத்துவமனைகள் பயன்படுத்தப்படுவதோடு இஅவர்களது வியாபார அரசியலுக்கு ஒரு சில நோயாளிகளும் பலியாக்கப்படுகின்றார்கள். அதில் ஒன்றுதான் இளம் தாயும் ,ஆசிரியையுமான ரியாஸா உவைசின் மரணமும்.
Published by


Leave a comment