‘நடைமுறை சாத்தியமான வாழ்க்கைக்கு வழிகாட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா’ – மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர்

manippai– FM. பர்ஹான்

மானிப்பாய்: பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கிடைக்கின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி எமது மக்களுக்கான சிறப்பான சேவையை செய்து வருபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர் திரு. சிவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் காலை அக்கல்லூரியில் மகிந்தோதயம் தொழில்நுட்ப பீடக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்ற போது தலைமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த அவர், வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சுற்றி எப்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருப்பதைக் காணலாம்.
இவர்கள் எல்லோரும் தங்களது பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே தினமும் அமைச்சரை நாடிச் செல்கின்றனர்.

தினமும் ஒய்வின்றி உழைத்துவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிவரும் மனிதநேயப் பணிகள் தான் அவரை இன்னும் வாழ வைத்துள்ளது.

எமது இனம் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் அம் மக்களின் நடைமுறைச்சாத்தியமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களேயாவார்.

man01

இந்த அரசு நாடளாவிய ரீதியில் கல்விமுறை மாற்றங்களைக் கொண்டு வருகிறது. பல்கலைக் கழகங்களுக்கு மாத்திரமே உரித்தாகவிருந்து பல வசதிகள் தற்போது பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் சந்திரராஜா, பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி சண்டிலிப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர், முன்னாள் கல்விப் பணிப்பாளர் திருமதி ரெஜினா இருதயநாதன், பழைய மாணவர் சங்கத் தலைவர் கணேசமூர்த்தி, ஈ.பி.டி.பியின் வலிகாமம் தென்மேற்கு இணைப்பாளரும், பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜீவா (ஜோன்சன்) உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

manippai

Published by

Leave a comment