தனியார் வகுப்பு நடாத்திய ஆசிரியர்கள் கைது: சவுதியில் சம்பவம்

300px-Arrest.svg[1]– SHM

ரியாத்: பிரத்யேகமாக வீட்டில் வைத்து மாணவர்களுக்கு தனிப்பட்ட டியூசன் சொல்லிக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இந்திய ஆசிரியர்களை ரியாத் பொலீசார் கைது செய்துள்ளனர்.தனிப்பட்ட முறையில் டியூசன் சொல்லித் தருவது சவுதி அரேபியாவில் பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், ரியாத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பிரபல பாடசாலை ஒன்றில் கர்நாடகாவைச் சேர்ந்த மெகபூப் பாதஷா, தமிழ்நாட்டைச் சேர்ந்த முகம்மது ரிபாய் மற்றும் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அஹமத் சித்திக் ஆகியோர் ஆசிரியர்களாக உள்ளனர்.

இந்த ஆசிரியர்கள் மூவரும் தனிப்பட்ட முறையில் வீட்டில் வைத்து மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பதாக பொலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலீசார், அங்கு தனிப்பட்ட டியூசன் நடப்பதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆசிரியர் மூவரையும் கைது செய்தனர்.

இத சம்பந்தமாக பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

சவுதியில் மாத்திரமன்றி, உலகில் பல நாடுகளில் தனியார் வகுப்புக்கள் (டியுசன்) தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment