பக்தாத்: ஈராக்கின் இரண்டாவது பெரியநகரமாக அழைக்கப்படும் மோசுல் நகரை ஈராக்கின் போராளிகள் கைப்பற்றிய இரண்டு நாட்களுக்குள் ஈரானின் மற்றுமொரு மிக முக்கிய நகரமான டிக்ரிட் (Tikrit) நகரத்தை போராளிகள் சற்று முன்னர் கைப்பற்றியுள்ளனர்.
கனரக ஆயுதங்கள் மற்றும் ரொக்கட் லோஞ்சர்களின் உதவியுடன் பலத்த போராட்டங்களுக்குப் பின்னர், டிக்ரிட் நகரை ஈராக்கிய போராளிகள் தற்பொழுது தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். டிக்ரிக் நகரம் பக்தாதிலிருந்து 150 கி.மீ. தொலைவில் இருக்கும் நகரமாகும்.
ஏற்கனவே கைப்பற்றப்பட்ட மோசுல் நகரத்திலிருந்து இதுவரைக்கும் ஐந்து இலட்சம் பொதுமக்கள் அகதிகளாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர்.
இதற்கிடையில், தலைநகர் பக்தாத்தில் ஷியா பிரிவினரின் கூட்டமொன்று நடந்துகொண்டிருக்கும் போது இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டும், 50க்கும் அதிகமான மக்கள் காயமடைந்துமுள்ளனர். இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோசுல் நகரம் போராளிகளின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
இதற்கிடையில், ஈராக் அரசாங்கம் அவசர அழைப்பை பிரகடனப்படுத்தி இருக்கின்றது. மேலதிக இராணவத்தினர் மோசுல் நகரை நோக்கி முன்னெடுத்தாலும், இரு தரப்புக்குமிடையில் பலத்த சண்டை இடம்பெற்று வருகின்றது.
இப்போரட்டங்களுக்கு அல்கய்தா, மற்றும் சிரியாவின் சில போராட்டப்படையணிகள் பின்புலத்தில் இருப்பதாக ஈராக் சந்தேகிக்கின்றது.
தற்பொழுது கைப்பற்றப்பட்டுள்ள டிக்ரிட் நகரம், முன்னாள் ஈரானின் தலைவர் சதாம் ஹூஸைனின் பிறந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment