உதைப்பந்தாட்டம்: ‘ஓஃப்சைட்’, ‘ஃபிரீ கிக்ஸ்’ விதிமுறைகள்

regree signs– MJ

லண்டன்: சென்ற ஆக்கத்தில் உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் ரசிகர்களை சில வேளைகளில் குழப்பமடையச் செய்யும் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகளின் முழுவிபரங்களையும் தெளிவாகப் பார்த்தோம். இன்றும் இவ்வாறான குழப்பங்களுக்குரிய, சந்தேகத்திற்குரிய விடயங்களை ஆராய்வோம்.

ஓஃப்சைட் (Offside):

ஓஃப்சைட் என்பது போட்டியைப் பார்ப்பவர்களுக்கு மாத்திரமல்ல, தொலைக்காட்சி வர்ணணையாளர்களுக்கும், சிலவேளைகளில் களத்தில் ஆடும் வீரர்களுக்கும் பல குழப்பங்களை ஏற்படுத்தும்.

இவற்றில் மிக முக்கியமாக இருவிடயங்கள் இருக்கின்றன. இவ்விரு விடயங்களும் தெளிவாக அறிந்திருப்பின் எமக்குள் ஓஃப்சைட் பற்றிய சந்தேகங்கள் எழாது. எனினும் கிரிக்கட் ஆட்டத்தில் ரண்அவுட் போன்றதே உதைப்பந்தாட்டத்தில் ஓஃப்சைட் நிகழ்வும் அமைந்து விடுகிறது.

ஆட்டமிழப்புக்கு இல்லை என்றும், ஆட்டமிழப்பற்றது என்பதற்கு ஆட்டமிழப்பு என்றும் நூல் இடைவெளியில் சில தீர்வுகள் கிரிக்கட்டில் அமைந்து விடுகின்றன. இதே போல்தான் நூல் இடைவெளியிலும் இந்த ஓஃப்சைட் நிகழ்வுகளும் அமைகின்றன.

offside_call1-300x187[1]

முதலாவது,எதிரணியனரின் எல்லையில் பந்துக்குப் பின்னால் வீரர் இருக்கவேண்டும். பந்து எமது சகவீரர் ஒருவரிடத்தில் இருக்கும்போது, குறித்த அதே அணியைச் சேர்ந்த வீரர் ஓருவர் எதிரணி வீரருக்குப் பின்னால் நின்று பந்தைப் பெற்றால், இது ஓஃப்சைட் எனக்கருதப்படும்.

இங்கு எதிரணியின் கோல் காப்பாளர் கணக்கிலடங்கமாட்டார். இவ் ஓஃப்சைட் விதியில் பந்துக்கும் எதிரணி வீரர்களுக்குமிடையில் நெருங்கிய உறவு இருக்கும்.

அதாவது நாம் பந்தை கோல்கம்பத்திற்கு எடுத்துச்செல்லும்போது பந்து எமக்கு முன்னால் இருக்கவேண்டும். இந்நிலையில் எதிரணிவீர்களுக்கு முன்னால் குறித்த வீரர் நின்றிருக்க வேண்டும்.
கோணர் கிக், துரோ, மற்றும் டிரக்ட் கிக் ஆகியவைகளுக்கு ஓஃப்சைட் விதி கடைப்பிடிக்கப்படாது.

ஃபிரீ கிக்ஸ் Free Kicks:

குறித்த சில விதிமுறைகளை மீறயமைக்காக இந்த உதைகள் வழங்கப்படுகின்றன. ஃபிரீ கிக் எனப்படும் உதைகள் இருவகைப்படும்.

டிரக்ட் கிக் Direct Kick:

நேரடியாகவே பந்தை கோல் கம்பத்துக்கள் அடிக்க முடியும். இது களத்தில் எதிரணி வீரர்களால் ஏற்படுத்தப்பட்ட விதி மீறல்களுக்கு அமைய மத்தியஸ்தர் முடிவெடுப்பார்.

டிரக்ட் கிக் உதைகளுக்கு ஓஃப்சைட் இல்லை. எதிரணி வீரர்கள் 10 யார்ட் சுற்றுவட்டத்திற்கு அப்பால் நிற்கவேண்டும். இரு அணி வீரர்களும் கோல்காப்பாளரைத் தவிர, பெனால்ட்டி எல்லைக்கு வெளியில் (உள்பெட்டி) நிற்க வேண்டும்.

direct kick

பந்தை உதைப்பவர் மாத்திரமே இதில் முக்கியம். மத்தியஸ்தரின் ‘விசில்’ சைகைக்குப் பின்னரே உதைக்க வேண்டும். வேறு எந்த வீரர்களிடமும் பந்து படவேண்டும் என்ற விதி ‘டிரக் கிக்’ இற்கு இல்லை.

டிரக்ட் கிக் உதையை மத்தியஸ்தர் தனது கையை நேராக உயர்த்தி (நீட்டி) சைகை செய்வார்.

regree signs

இன்டிரக்ட் கிக் Indirect Kick:

டிரக்ட் கிக் இற்குரிய அனைத்து விதிமுறைகள் போன்றே இதற்கும் கடைப்பிடிக்கப்படும். ஆனால் பந்து, குறைந்தது இரு வீரர்களைத் தொட்டுச் செல்லவேண்டும்.

இதற்கு மத்தியஸ்தர் தனது கையை தலைக்கு மேலாக உயர்த்தி, சைகை செய்வார்.

indirect kick

உதைப்பந்தாட்ட வரலாற்றில் இடம்பெற்ற மிகச் சிறந்த டிரக்ட் கிக் உதையாக இது அமைகிறது.

Published by

Leave a comment