‘ஸ்பெயினுக்கே கிண்ணம்’ -டொரிஸ்

fernando-torres-4[1]ரியோ: இம்முறையும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின்தான் கிண்ணத்தை வெல்லும் என்று அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பெர்னாண்டோ டொரிஸ் கூறியுள்ளார்.

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் பிரேசிலில் நாளை ( வியாழன்) ஆரம்பிக்கவுள்ளன. 2010 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியிலும், ஐரோப்பிய சம்பியன்சிப் போட்டியின் 2 ஆட்டங்களிலும் கோலடித்து சாதனை புரிந்தவர் டொரிஸ்

2008-ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய சம்பியன்சிப்ப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜேர்மனிக்கெதிராக கோலடித்து ஸ்பெயினை கிண்ணம் வெல்லச் செய்தவரும் இவரே.

இந்த உலகக் கிண்ணத்திலும் ஸ்பெயின் அணிதான் பட்டம் வெல்லும். அணிக்கு கிண்ணத்தை வென்று தரக்கூடிய வீரர்கள் அணியில் இடம்பெற்றுள் ளனர். பல்வேறு காயங்கள் காரணமாக சில காலம் அணியில் இடம்பெற முடியாமல் போய்விட் டது. இது எனக்கு சோதனையான காலம். மீண்டும் அணியில் இடம்பெற முயற்சித்து வருகிறேன். போட்டியில் விளையாட முழுத் தகுதியுடன் இருக்கிறேன் என்றார் டொரிஸ்.

fernando-torres-4[1]

Published by

Leave a comment