-டீன் பைரூஸ்-
காத்தான்குடி:புதிய காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் பாலர் பாடசாலை (HPS) மாணவர்களின் கல்விச் சுற்றுலா அன்மையில் இடம் பெற்றது. இதன போது மாணவர்கள்,பொற்றோர்கள்,ஆசிரியா்கள்,பாடசாலை நிர்வாகிகள் என சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் இச்சுற்றுலாவில் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி நகர சபையின் கௌரவ உறுப்பினர் அல்ஹாஜ் HMM பாக்கீர் BA/JP அவர்களின் தலைமையின் கீழ் இப்பாலர் பாடசாலை இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் சுற்றுலாவின் இறுதி நிகழ்வாக ஓட்டமாவடி பிரதேச சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட“ சிறுவர் புங்கா” மைதானத்தில் சிறுவர்களுக்கான பல்வேறு பட்ட போட்டி நிகழ்ச்சிகள் ஏட்பாடு செய்யப்பட்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எல்.ஹமீட் jp,காத்தான்குடி நகர சபை உறுப்பினரும்,HPS பணிப்பாளருமான அல்ஹாஜ் HMM பாக்கீர் BA/JP , பி.ச உறுப்பினர் அஷ்ஷெய்ஹ் எம். ஜீனைட் (நழீமி), மற்றும் பாடசாலை நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் தாய் மார்களுக்கான விசேட பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய நிகழ்வுக்காக தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மேற்படி “ சிறுவர் புங்கா” வினை எமது மாணவா்களுக்காக வேண்டி நேர காலத்துடன் திறந்து தந்து எமது இன்றைய நிகழ்வினில் கலந்த கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எல்.ஹமீட் jp வெர்களுக்கு எமது பாடசாலை மாணவா்கள். பொற்றோர்கள்,நிர்வாகிகள் சார்பாக மன மார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அல்ஹாஜ் HMM பாக்கீர் BA/JP கூறினார்.
Published by







Leave a comment