கண்டி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் கண்டி மாவட்டத்தில் பல முக்கிய நிகழ்வுகளில் பங்குபற்றினார். ஞாயிற்றுக்கிழமை, கடுகண்ணாவை, குறுக்குத்தலை கிராமத்தில், மறு நாள் திங்கள் கிழமை அக்குறணையில் மகளிர் பாடசாலை, புளுகொஹதென்ன சாஹிரா தேசிய கல்லூரி, கசாவத்தை ஆரம்ப பாடசாலை ஆகியவற்றிற்கு அமைச்சர் விஜயம் செய்தார்.
அவற்றிற்கு நிதி உதவிகளையும் வழங்கினார். முக்கியமாக, அக்குறணை சாஹிரா தேசியப் பாடசாலையில் தமது முயற்சியின் பயனாக, அனர்த்த நிவாரண அமைச்சர் மஹிந்த அமரவீர வழங்கிய ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபா நிதி உதவியால் கட்டியெழுப்பப்படும் தடுப்பு மதிலையும் அமைச்சர் ஹக்கீம் பார்வையிட்டார்.
புனரமைக்கப்பட்ட தெல்தெனிய நீதிமன்றத்தையும் நீதியமைச்சர் ஹக்கீம் சென்று பார்வையிட்டார்.
மாலையில் கண்டி அலுவலகத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்றிலும் அவர் ஈடுபட்டார்.
Published by

Leave a comment