‘தான் 17வயதுப் பெண்ணைத் திருமணம் செய்வதாக வெளியான செய்தி பொய்யானது’- சுகைப் அக்தார்

Shoaib_Akhtar_300[1]– MJ

இஸ்லாமாபாத்: ‘தான் 17வயதுப் பெண்ணைத் திருமணம் செய்ய இருப்பதாக சில பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். இச்செய்திக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது’ என முன்னால் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுகைப் அக்தார் தெரிவித்துள்ளார்.

சுகைப் அக்தார் இதுபற்றிக் கூறுகையில்,

‘தான் திருமணம் செய்யவிருப்பது உண்மையே. ஆனால் 17வயதுப் பெண்ணைத் திருமணம் செய்யவிருப்பதாக சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இப்போலிச் செய்தியைக் கேள்விப்பட்ட எனது நண்பர்கள் எனக்கு குறித்த தவறான செய்திகள் விடயமாக குறுந்தகவல்களை அனுப்பி இருந்தனர். எனக்கு உடனடியாகத் தெரியப்படுத்தியமைக்காக அவர்களுக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்பதாக சுகைப் அக்தார் தெரிவித்தார்.

பிரபல தொழிலதிபரான முஸ்தாக் கானின் மகளான ருபாப் என்பவரை திருமணம் செய்வதாக செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும் இப்பெண் 17 வயதையுடையவர் அல்ல என்பதாக சுஹைப் அக்தார் மேலும் தெரிவித்திருந்தார்.

‘ராவல் பிண்டி எகஸ்பிரஸ்’ என அழைக்கப்பட்ட சுகைப் அக்தார், இறுதியாக கடந்த 2011 இல் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shoaib_Akhtar_300[1]

Published by

Leave a comment