றியாத்: வளைகுடா கூட்டுத்தாபன சபை (Gulf Cooperation Council) என அழைக்கப்படும் ஜி.சி.சி., விரைவில் மத்திய கிழக்கிற்கான புதிய வீசா முறையினை அறிமுகப்படுத்த உத்தேசித்து வருவதாக ஜி.சி.சி அமைப்பின் இயக்குனர் நஜீப் அல் ஸாமஸி தெரிவித்துள்ளார்.
இந்த ஒருங்கிணைந்த (unified) வீசா முறையானது வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்காக ஒன்றுபட்ட சுற்றுலா வீசா எனும் புதிய வீசா நடைமுறைக்குள் அமையவிருக்கின்றது.
இதன்படி, இப்புதிய வீசாவில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், ஓமான், குவைட் மற்றும் பஹ்ரைன் ஆகிய 6 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
இவ்வீசாவிற்கு விண்ணப்பிக்கும் ஜி.சி.சி. அமைப்பதைத் தவிர்ந்த நாட்டவர்களிடமிருந்து அதிகபட்ச தகமைகள் எதிர்பார்க்கப்படும். குறிப்பாக விண்ணப்பதாரியின் வர்த்தக மற்றும் சுயவிபரங்கள் அலசப்படும். ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இவ்வீசா முறை பெரிதும் உதவும் என்பதுடன், வளைகுடா நாட்டவர்களுக்கும் இலகுவாக அமையும் என இவ்வமைப்பின் அதிகாரிகள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
இது மத்திய கிழக்கிற்கு அதிகமான மக்களை சுற்றுலாவுக்கு அழைக்கும் நல்லதொரு சேவையாக அமையும் என்பதுடன், வர்த்தக நடவடிக்கைகளுக்கும் வளைகுடா நாட்டின் வருமானத்திற்கும் ஓர் பங்களிப்பை வழங்கும் எனவும் மேலும் எதிர்பார்க்கப்படுகிறது.
Published by

Leave a comment