ஜமைக்கா: ‘பீபா உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு இம்முறை பிரேஸிலுக்கே உள்ளது’ என மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீபாவின் 20 ஆவது உலகக்கிண்ண கால்பந்து தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
‘நான் சிறுவயது முதலே கால் பந்து ரசிகன், பாடசாலைக் காலத்தின் போது 14 வயதுக்குட்பட்டோருக்கான கால் பந்து அணியை வழிநடத்தியிருக்கிறேன். பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்த பின்பும் கால்பந்துதான் விளையாடுவேன். அப்போதெல்லாம், கிரிக்கெட் பற்றிய எண்ணம் இருந்ததே கிடையாது’.
மேலும் ‘இம் முறை உலகக்கிண்ண கால் பந்து தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். எப்போதுமே நான் பிரேஸில் அணியின் ரசிகன். இம்முறை சொந்த மண்ணில் உலகக் கிண்ணத் தொடர் நடப்பது பிரேஸில் அணிக்கு நெருக்கடி தரலாம். ஆனாலும் சிறப்பான திட்டத்தை அமைத்து அவ் அணி சம்பியன் பட்டம் வெல்லும் என நம்புகிறேன்’ என அவர் தெரிவித்தார்.
Published by

Leave a comment