றியாத்: சவுதி அரேபியாவின் அஸிர் நகரில் அமைந்துள்ள மன்னர் காலித் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் ஆளில்லாத உளவு விமானத்தை (Drone) வடிவமைத்துள்ளனர்.பேராசிரியர் தௌபீக் கத்தாப் அவர்களின் தலைமையில் பொறியியல் மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
‘தற்பொழுது உளவு விமானத்தின் வடிவமைப்பு கச்சிதமாக நிறைவுபெற்றுள்ளது. இதன் பாகங்களை ‘பைபர் கிளாஸ்’ மூலமாக அமைத்து, வெள்ளோட்டத்திற்கு தயாராக்குவோம்’ என பேராசிரியர் தௌபீக் கத்தாப் தெரிவித்தார்.
மேலும், ‘இதற்கான கமெரா, ரிமோட் கொன்ரோல் மற்றும் விமானத்தின் சக்கரம் போன்ற தயாரிப்புக்களில் மாணவர்கள் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்’ எனவும் தௌபீக் கத்தாப் மகிழ்ச்சியும் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ் உளவு விமானம் வெற்றியளிப்பின், சவுதிக்கான தனிப்பெருமையை ஈட்டிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment