காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு புதிய பெயர்ப்பலகை

hospital– நமது நிருபர்

காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு புதிய கண்ணாடியிலான பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது.  இதுவரை காலமும் காத்தான்குடி வைத்தியசாலைக்கு பெரும் குறையாக இருந்து வந்த பெயர்ப்பலகை தற்போது பொருத்தப்பட்டுள்ளது.

ஏனெனில் புதிதாக வைத்தியசாலைக்கு வரும் பல்வேறுபட்ட அதிகாரிகள் வைத்தியசாலையினை அடையாளம் காண்பதில் பல்வேறுபட்ட அசௌகரியங்கள் எதிர்நோக்கியதனை அவதானிக்க முடிந்தது.

பெயர்ப் பலகை இல்லாத குறையினை புதிதாக பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையை பொறுப்பேற்ற திரு. T. கௌரிசங்கரன் அவர்களின் முயற்சியால் இப் புதிய பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது.

இப் பெயர்ப் பலகைக்கு Media Johnson நிறுவனத்தினர் அனுசரணை வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

hospital

Published by

Leave a comment