ரியோ: உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டி எதிர்வரும் 12-ம் திகதி பிரேசிலில் ஆரம்பபமாகிறது. 32 அணிகள் பங்கேற்கின்றன. எந்த அணி கிண்ணத்தை வெல்லும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் தொற்றி கொண்டுள்ளது.
இந்த நிலையில், உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் பிரேசில்- ஆர்ஜன்டினா அணிகள் மோத வாய்ப்பு இருப்பதாக பிரேசில் அணியின் பயிற்சியாளர் சோலாரி கணித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த உலக கிண்ண தொடரை நாங்கள் ஆராய்ந்ததில் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள இரு வலிமையான அணிகள் இறுதிப்போட்டியில் மோதும். அதில் ஒன்று பிரேசில் மற்றொரு அணி ஆர்ஜன்டினா. ஏனென்றால் இரு அணியிலும் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர் என்றார்.
இருந்த போதிலும், நடப்பு உலகச்சம்பியனும், நடப்பு ஐரோப்பா சம்பியனுமான ஸ்பைன் அணியும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment