றியாத்: சவுதியில் கடந்த இரு வருடங்களாக பரவி வரும் மெர்ஸ் எனும் ஆட்கொல்லி வைரஸ் நோய் கடந்த 6 வாரங்களில் 80 வீதமாக வீழ்ச்சியடைந்திருப்பதாக சவுதி அரேபியாவின் உதவி சுகாதார அமைச்சர் ஆதில் பாகிஹ் தெரிவித்துள்ளார்.
ஒட்டகங்களில் இருந்து பரவிவரும் இந்த மெர்ஸ் வைரஸ், மனிதர்களின் தொண்டைச் சளியுடன் கலந்து, மரணத்தை ஏற்படுத்தும் ஓர் வைரஸ் நோயாக இருந்து வந்தது.
துரிதமான மருத்தவ சேவைகளும், கண்காணிப்புக்களும் மற்றும் மக்களுக்கான விழுப்புணர்சி ஏற்பாட்டிலும், இவ்வியாதி தற்பொழுது குறைந்து வருகின்றது. எதிர்வரும் ரமழான் மற்றும் அதனைத் தொடரந்துவரும் ஹஜ் காலங்களில் சவுதிக்கு வரும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும், தற்பொழுது இந்நோய் சவுதியில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆதில் பாகிஹ் தெரிவித்தார்.
‘கடந்த 2012, செப்டம்பர் மாதம் மெர்ஸ் நோய் முதன் முதலில் சவுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்நோயால் 689 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களுள் இதுவரை 283 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்ட 53 நோயாளர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்திருக்கின்றனர்’ எனவும் ஆதில் பாகிஹ் தெரிவித்தார்.
Published by
![saudi-arabia-sars[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/saudi-arabia-sars1.jpg?w=150&h=84)
Leave a comment