பாகிஸ்தான் ஒப்பந்த பட்டியலில் இருந்து சுஐப் மலிக், கம்ரன் அக்மல் நீக்கம்

pakistanலாஹூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை அந்த நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. முன்னாள் தலைவர் சுஐப் மலிக் மற்றும் விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மல் ஆகியோர் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மூத்த வீரர் யூனிஸ்கான் ‘ஏ’ பிரிவில் இருந்து ‘பி’ பிரிவுக்கு தரம் இறக்கப் பட்டுள்ளார். அதே சமயம் வேகப் பந்து வீச்சாளர் ஜூனைட்கான் ‘பி’ பிரிவில் இருந்து ‘ஏ’ பிரிவுக்கு தரம் உயர்த்தப்பட் டுள்ளார்.

மொத்தம் 31 வீரர்கள் தற்போதய ஒப்பந்த பட்டியலில் இருக்கி றார்கள்.

‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் மிஸ்பா உல்-ஹக்,  அப்ரிடி,  முகமது ஹபீஸ்,  சஹிட் அஜ்மல்,  ஜூனைட் கான் ஆகிய 5 வீரர்களுக்கு 4 இலட்சத்து 49 ஆயிரத்து 218 ரூபாயும்,  ‘பி’ பிரிவு வீரர்களுக்கு 3 இலட்சத்து 14 ஆயிரத்து 452 ரூபாயும்,  ‘சி’ பிரிவு வீரர்களுக்கு 1 இலட்சத்து 79 ஆயிரத்து 687 ரூபாயும்,  கடைசி பிரிவில் (டி) இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு 89 ஆயிரத்து 843 ரூபாயும் மாத ஊதியமாக வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Published by

Leave a comment