கொழும்பு: வெளிநாட்டவர்கள் அந்நிய செலாவணியுடன் ஏதாவது ஒன்றை செய்ய இலங்கைக்கு வருகின்றனர். அவர்களிடம் தரகு பணம் கேட்டால் அவர்கள் நாட்டில் இருப்பார்களா என அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.
கூகிள் இலங்கைக்கு வந்திருந்தால் நாட்டுக்கு கோடிக்கணக்கில் நன்மை ஏற்பட்டிருக்கும். இலங்கையில் உள்ள பல பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
மூன்று அமெரிக்கர்கள் இலங்கைக்கு வந்து கூகிள் நிறுவனத்தின் கிளை ஒன்றை ஆரம்பிக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.
அனைத்தையும் பேசிய பின்னர், தரகு பணம் கேட்டதால், அந்த நிறுவனத்தினர் இலங்கையில் கிளையை ஆரம்பிக்கும் எண்ணத்தை கைவிட்டு திரும்பிச் சென்று விட்டனர். இப்படித்தான் பல முக்கிய நிறுவனங்கள் இலங்கைக்கு வந்து திரும்பி செல்கின்றன.
சீனாவில் நடைபாதைகளில் இருப்பவர்களே இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தற்போது சீனாவின் காலனியாவிட்டது என அசாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.
Published by
![google-phone[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/google-phone1.jpg?w=104&h=150)
Leave a comment