கொழும்பு: மகிந்த ராஜபக்ஷவின் மரணத்துக்கு பின்னர் அல்லது ஜனாதிபதி பதவியில் நீடிக்க உடல் நிலை ஒத்துழைக்காத பட்சத்தில் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஆரம்ப கட்டமாக அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் அமைப்பின்படி, ஜனாதிபதி ஒருவரின் மரணத்துக்கு பின்னர் அல்லது ஜனாதிபதி பதவியில் நீடிக்க உடல் நிலை ஒத்துழைக்காத பட்சத்தில், நாட்டின் பிரதமர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.
இடைக்கால ஜனாதிபதி, ஒரு மாதத்தின் பின்னர் தமது பதவியை ராஜினாமா செய்வதுடன், அரசாங்க கட்சியில் இருந்து ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்.
நாட்டின் பிரதமராக வேறொருவர் இருக்கும் பட்சத்தில், தமது குடும்ப உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்பது சந்தேகமானது.
இந்த நிலையில் தமது சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷவை பிரதமராக நியமித்துவிட்டால், ஏதேனும் அசம்பாவிதம் இடம்பெறும் பட்சத்தில், கோத்தபாய இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்பார்.
பின்னர் மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகள் எவையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படாத வகையில், தமது மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷவை சபாநாயகராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by
![Gotabaya[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/gotabaya1.jpg?w=120&h=150)
Leave a comment