கொழும்பு: வடகிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்காக 2200 கழிவறை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் மீள்குடியேற்ற அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயளாலர் ஜனக சுகததாஸ தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் இத்திட்டத்திற்காக ரூபா 1400 இலட்சங்கள் மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதேவேளையில் ஒரு கழிவறை நிர்மாணத்திற்காக குறைந்தது ரூபா 50000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விஷேடமாக குறைந்தளவு வருமானம் பெறும் மீள்குடியேற்றப்பட்ட 2200 குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் அளிக்கப்படவுள்ளவர்கள் பெரும்பான்மையாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் உள்ளவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது இம் 3 மாவட்டங்களிலும் கழிவறை வசதிகள் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றன.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்த மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களின் சுகாதார வசதிகளின் தேவைப்பாடு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மீள்குடியேற்ற அமைச்சினால் நடாத்தப்பட்ட வேலையில் இரு பகுதிகளிலும் மீள்குடியேற்றப்பட்ட 49509 குடும்பங்கள் தொடர்பாக சுகாதார வசதிகள் கிடைக்கப்பெறாமை தெளிவாகியுள்ளது.
இதுவரை காலமும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்ட மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 226239 ஆகும் அதற்கிணங்க பெருந்தொகையான குடும்பங்களுக்கு இவ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. முதன்மையாக சுகாதார வசதிகள் வழங்கப்படாத எஞ்சியுள்ள குடும்பங்களுக்கு குறைந்தது 2 வருட காலப்பகுதிக்குள் சுகாதார வசதிகள் வழங்குவதற்கான செயற்றிட்டங்கள் இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
மீள்குடியேற்ற அமைச்சினால் 2013ம் வருடத்தில் இது போன்ற திட்டங்கள் வடகிழக்கு மாகாணங்களில் செயற்படுத்தப்பட்ட அதேவேளை அதன் கீழ் சுகாதார வசதிகள் 1673 குடும்பங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இதன் போது ஜனக சுகததாஸ தெரிவித்தார்.
ஏ.எல்.எம்.தாஹிர்
ஊடகப் பிரிவு
மீள்குடியேற்ற அமைச்சு
Published by

Leave a comment