சிட்னி: மாயமான மலேசிய விமானம் இந்தியா அருகே கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தை தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மாதக் கணக்கில் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை விமானத்தின் பாகம் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்தியாவின் தெற்கு முனை அருகே உள்ள கடல் பகுதியில் மத்திய இந்திய பெருங்கடலில் ஏதோ ஒருவகையான ஒலி அதுவும் விமானம் மாயமான நேரத்தில் அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கேட்டுள்ளனர்.
அந்த ஒலி மாயமான விமானத்தில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த கேத்ரீன் டீ என்பவர் கடந்த மார்ச் மாதம் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கடல் வழியாக தாய்லாந்தின் புக்கெட்டுக்கு செல்கையில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததை பார்த்ததாக தெரிவித்தார்.இந்த விவரங்களை வைத்து பார்க்கையில் விமானம் இந்தியா அருகே விழுந்திருக்கும் என்று கூறப்பட்டது.
Published by

Leave a comment