இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்ததை பார்த்த இங்கிலாந்து பெண்

plane 1– S-90

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்ததை தான் பார்த்ததாக இங்கிலாந்தைச் சேர்ந்த கேத்ரீன் டீ என்பவர் தெரிவித்துள்ளார். மலேசிய விமானம் எம்.எச்.370 மாயமாகி சுமார் 3 மதாங்களைத் தொடும் நிலையில், இதுவரைக்கும் ஆளாளுக்கு கதைகளை அளந்துகொண்டுதான் இருக்கிறார்களே தவிர, விமானத்தைக்கண்டுபிடிக்க மனிதனுக்கோ, நவீன விஞ்ஞானத்துக்கோ முடியாமல்தான் இருக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச. 370 மாயமானது. இதையடுத்து விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்தது.

இருப்பினும் இந்திய பெருங்கடலில் 3 மாதமாக தேடி வரும்போதிலும் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.இந்நிலையில் மாயமான விமானம் எரிந்ததை தான் பார்த்தாக இங்கிலாந்தைச் சேர்ந்த கேத்ரீன் டீ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘நானும் என் கணவர் மார்க் ஹோர்னும் விடுமுறையை கழிக்க சென்றோம். நாங்கள் கொச்சியில் இருந்து தாய்லாந்தில் உள்ள புகெட்டுக்கு படகில் சென்றோம். அப்போது இந்திய பெருங்கடலில் செல்கையில் இரவு நேரத்தில் படகில் இருந்தவர்கள் தூங்கிவிட்டனர். அப்போது நான் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததை பார்த்தேன். அது வழக்கமான விமானத்தைவிட பெரிதாக இருந்தது. அதில் இருந்து கரும்புகை வந்தது’ என்றார்.

இது குறித்து கேத்ரீனும், அவரது கணவரும் விமானத்தை தேடும் குழுவிடம் தெரவித்துள்ளனர். மாயமான விமானம் சென்ற பாதையில் தான் அவர்களின் படகு சென்றுள்ளது. அதனால் தீப்பிடித்து எரிந்தது மாயமான மலேசிய விமானமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Published by

Leave a comment