சர்ச்சைக்கு மத்தியிலும் இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்றது இலங்கை

186663– MJ

பேர்மினம்: நேற்று இங்கிலாந்தின் பேர்மினம் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஐந்தாவதும் இத்தொடரின் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று தொடரை 3:2 என வென்றுள்ளது.

இங்கிலாந்து அணியை இங்கிலாந்து மண்ணில் வெற்றிகொள்வது கடினமான விடயமே! அதிகமாக இங்கிலாந்து அணியை இங்கிலாந்து மண்ணில் வெற்றிகொண்ட அணியாக அவுஸ்திரேலியா திகழ்கின்றது.

மஹேல ஜயவர்த்தனா மற்றும் திரிமன்னே ஆகியோரின் இணைப்பாட்டம் இலங்கை அணிக்கு வலுசேர்த்தது. மஹேல 53 ஓட்டங்களும், திரிமன்னே ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். 

186661

இதற்கிடையில், சேனநாயக்க வீசிய 42வது ஓவரில் இங்கிலாந்து அணியின் துடப்பாட்டவீரர் பட்லரை பந்து வீசுவற்கு முன், ரண்அவுட் மூலமாக ஆட்டமிழக்கச் செய்தார்.

srilanka cricket sena

கிரிக்கட் வரலாற்றில் இவ்வாறான சம்பவம் 1992 உலகக்கிண்ணப் போட்டியின் போது, இந்திய அணியின் தலைவர் கபில் தேவ், பந்தை வீசுவதற்கு முன்னர் தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் கேர்ஸ்டனை இதே முறையில் ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

ஆனால், நேற்றைய குறித்த சம்பவம் தற்பொழுது  தீயாக பரவிவரும் நிலையில், 2011ம் ஆண்டில் குறித்த விதிமுறையை ஐ.சி.சி மாற்றியிருந்ததது.

இருந்தபோதிலும், இலங்கையின் வெற்றி இலங்கை அணிக்கு ஓர் புத்துணர்ச்சயை ஏற்படுத்தி இருப்பதுடன், இங்கிலாந்து அணிக்கு தொடர்ந்தும் விமர்சனங்களைத் தோற்றுவித்திருக்கின்றது.

kapil cricket
1992 உலகக் கிண்ணத்தின் குறித்த ரண் அவுட்

இவ்விரு நாடுகளுக்குமிடையிலான இரு டெஸ்ட் போட்டிகள் இன்னும் மீதமிருக்கின்றன. முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 12ம் திகதி லண்டன் லோட்ர்ஸ் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி காலை 11 (இலங்கை நேரப்படி பி.ப.3:00)மணிக்கு இடம்பெற இருக்கின்றது.

சேனநாயக்காவின் பந்துவீச்சு, மற்றும் குறித்த ரண் அவுட் விவகாரங்களால் தற்பொழுது சர்ச்சைகள் எழுந்தவன்னமிருக்கின்றன. போட்டி நிறைவடைந்தபோதும், பட்லர் இலங்கை அணியின் தலைவர் மத்யூஸூடன் ஏதோ கதைத்து வந்தமையும் அவதானிக்கத்தக்கது. 

186663

Published by

Leave a comment