சசித்ர சேனநாயக்கவின் பந்து வீச்சில் மத்தியஸ்தர்கள் சந்தேகம்!

sena– MJ

லண்டன்: கடந்த சனிக்கிழமை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் போது, இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் சசித்ரா சேனநாயக்காவின் சில பந்து வீச்சுக்கள் மத்தியஸ்தர்களுக்குள் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

குறித்த போட்டியின்போது கள (ஒன்பீல்ட்) மத்தியஸ்தரகளாக கடமையாற்றிய மரைஸ் எராமுஸ், இயன் குட், தொலைக்காட்சி மத்தியஸ்தராக இருந்த கிறிஸ் கப்ஃபனி மற்றும் போட்டி நடுவராக இருந்த ஜெஃபி குரோவ் ஆகிய நான்கு மத்தியஸ்தர்களாலும் அறிக்கை ஒன்று இலங்கை கிரிக்கட் அயியின் முகாமையாளரிடம் நேற்றைய முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.

அவ் அறிக்கையில், குறித்த போட்டியின் போது சசித்ர சேனநாயக்காவால் வீசப்பட்ட ஒரு சில பந்துகளில் தங்களுக்குச் சந்தேகங்கள் இருப்பதாகவும், பந்தை எரிவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சேனநாயக்கா வீசும் பந்துகளில் சில சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கு அப்பால் இருப்பதாக தாங்கள் சந்தேகிப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாங்கள் இந்த அறிக்கையை ஐ.சி.சி. இற்கு அனுப்பியுள்ளதாகவும், 21 நாட்களுக்குள் இது சம்பந்தமான முடிவை ஐ.சி.சி அறிவிக்கும் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

sena

முடிவு வரும்வரைக்கும் சசித்ர சேனநாயக்க தொடர்ந்தும் சர்வதேச மற்றும் உள்ளுர் போட்டிகளில் விளையாடவும், பந்து வீசவும் முடியும் என்பதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சேனநாயக்க கடந்த இரண்டு வருடங்களாக உள்ளுர் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பா விளையாடி வரும் ஓர் வீரர். கடந்த இருவருடங்களிலும் சேனநாயக்காவின் பந்து வீச்சு சம்பந்தமாக எந்த முறைப்பாடுகளையும், சந்தேகங்களையும் எவரும் வெளியிடவில்லை’ என இலங்கை கிரிக்கட் சபை, குறித்த அறிக்கைக்கு பதிலளித்துள்ளது.

Sri Lanka Nets

எனினும், கடந்த 2011 இல், இலங்கை ஏ அணி இங்கிலாந்து வருகை தந்திருந்தவேளையில் இதே குற்றச்சாட்டு சேனநாயக்காவுக்கு எழுந்திருந்தது. அதன் பின்னர் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் அமைந்துள்ள ஐ.சி.சி பந்துவீச்சு பரிசோனை நிலையத்தின் பயோமெகனிகல் பரிசோதனைக்குப் பின்னர், சேனநாயக்கா பந்தை ஐ.சி.சி விதிமுறைகளுக்கு ஏதுவாகவே வீசுகிறார் என தனது அறிக்கையை ஐ.சி.சி வெளியிட்டிருந்தது.

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், ஓர் சிறந்த இளம் சுழற்பந்து வீச்சாளராகவும் இலங்கை அணியில் அண்மைக்காலமாகப் பிரகாசித்துவரும் சேனநாயக்காவுக்கு, இவ்வாறான சோதனைகள் ஏற்படுவது இலங்கை கிரிக்கட் இரசிகர்களுக்கு ஓர் சோகமான செய்தியாக அமைகின்றது.

Published by

Leave a comment