துபாய்: துபாயில் டமக் புரோபடீஸ், டிரம்ப் நிறுவனத்துடன் இணைந்து ஆசியாவின் மிகப்பெரிய ‘கோல்ஃப் கோர்ஸ்’ ஒன்றை அமைக்க இருப்பதாக செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
டமக் புரோபடீஸ் தலைமை செயல் அலுவலர் ஹுசைன் சஜ்வானி, டிரம்ப் நிறுவனத்தின் சேர்மன் டொனால்ட் ஜெ டிரம்ப், துணைத் தலைவர் இவான்கா டிரம்ப் உள்ளிட்டோர் புதிதாக அமையவிருக்கும் கோல்ஃப் கோர்ஸ் குறித்தும், எதிர்காலத்தில் இது பெற இருக்கும் முக்கியத்துவம் குறித்தும் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.
அதனைத் தொடர்ந்து கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடி மைதான பணிகளை டிரம்ப் மற்றும் சஜ்வானி ஆகியோர் துவக்கி வைத்தனர். கூட்டத்தில் சர்வதேச பத்திரிகையாளர்கள் பலர் பங்கேற்றனர்.
இது ஆசியாவின் மிகப் பெரிய கோல்ப் திடலாக அமையவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment