பேர்லின்: 2013 ஆரம்ப காலங்களில் உலகப் புகழ்பெற்ற கழகங்களில் ஒன்றான ரியல் மெட்ரிட் அணியில், ஜேர்மனி வீரர் மீஸூட் ஒஸில் மற்றும் போர்த்துக்கள் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இணைபிரியாத நண்பர்களாக இருந்து வந்தனர்.
போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக மைதானத்தில் வைத்து, சக வீரர்களுக்கும், பல்லாயிரம் இரசிகர்களுக்கும் முன்னிலையில் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் பழக்கம் ஜேர்மனி வீரர் ஒஸிலுக்கு இருந்து வந்தது.
இதனை இரசிகர்களும், மீடியாக்களும் ஏன்.. சக வீரர்களும் ஆர்வத்துடன் கண்டு மகிழ்வர்.
துருக்கி வம்சாவழியில் வந்த ஒஸில் மீஸூட், ஜேர்மனியராவார். ஜேர்மனின் தேசிய அணிக்கு முன்னணி களத்தில் அதிரடி வீரர்களுள் ஒருவராக விளையாடி வருகின்றார். இவர் தற்பொழுது இங்கிலாந்தின் ஆர்சனல் அணிக்கு விளையாடுகிறார்.
‘நானும் ரொனால்டோவும் இணைபிரியாத நண்பர்களாகவே ரியல் மெட்ரிட் கழகத்தில் இருந்து வந்தோம். எனது மார்க்க விடயங்களை அவதானிப்பார். அவருக்கு இஸ்லாத்தின்பால் ஆர்வம் இருக்க வேண்டும். எனினும் அவர் என்னிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை’. (அல்லாஹ் அறிந்தவன்).
‘நாங்கள் போட்டியொன்றில் களமிறங்கும் முன்னர் லொக்கருக்குள் செல்வோம். அங்கு செல்லும் போதே நான் ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ என ஓதிக்கொள்வேன். இதனை ரொனால்டோ விரும்பி அவதானிப்பார்’.
‘சில வேளை நான் பிஸ்மி சொல்வதற்கு மறந்துவிட்டால், ‘மீஸூட் நீ பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்துவிட்டாய் கூறிக்கொள்’ என என்னை பணிப்பார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் மொபைல் நிறுவனமொன்றுக்கு தன்னை விளம்பரத்திற்காக ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நேரத்தில் குறித்த நிறுவனம், போர்த்துகீஸ் மொழிபெயர்ப்பு அல்குர்ஆன் ஒன்றை ரொனால்டோவுக்கு வழங்கி இருந்தது.
அண்மைக்காலமாக ரொனால்டோ மீது சில அவதானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் பிரதானமானது
ரொனால்டோ குர்ஆனைப் படித்து வருகிறாரா?
அவர் இஸ்லாத்தை ஆராய்கிறாரா?
என்பன பிரதானமானவை.தான் இதுவரை காலமும் காதில் அணிந்து வந்த காதணியை ரொனால்டோ களற்றி வீசி இருக்கின்றார்.
உலகப்புகழ்பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இந்த மாற்றம் இன்னும் பல சந்தேகங்களைத் தோற்றுவித்திருக்கின்றன.
தனக்கு கிடைத்த தங்கப் பாதணியை பலஸ்தீனக் குழந்தைகளுக்காக அன்பளிப்புச் செய்தார். இதேபோல் இஸ்ரேல் இரசிகர் ஒருவர் ரொனால்டோவின் கழக அங்கியை (T-Shirt) கேட்டதற்குக் கொடுக்க மறுத்தார். இதன் பின்னரே ரொனால்டோவின் செயற்பாடுகள் உலகளவில் அவதானிக்கப்பட்டு வருகின்றன.
தனது பழைய அனுபவத்தை கூறிய ஒஸில், ‘எது எப்படியிருந்தபோதிலும் நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாகவே இன்றும் இருக்கிறோம்’ என்பதாக ஒஸில் அண்மையில் உள்ளுர் ஊடகமொன்றுக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by
![ronaldo al quran[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/06/ronaldo-al-quran1.jpg?w=150&h=110)

![ronaldo al quran[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/06/ronaldo-al-quran1.jpg?w=320&h=236)


Leave a comment