கல்முனை: 2014 ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான கணித பாட கருத்தரங்கொன்று கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில், FAST (Focus of Applied Studies and Technology) அமைப்பினரால் இன்று (06.01.2014) காலை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இக்கருத்தரங்கானது, கல்லூரியின் உப அதிபரும், தரம் 11 இற்கான வலய அதிபருமான எம்.ஐ.ஜவாஹர் இப்ராஹீம் அவர்களின் வழிகாட்டலின் கீழ், தரம் 11 இன் பகுதித் தலைவர் ZT. ஷியாம் அவர்களின் கண்காணிப்பில் இடம்பெற்றது.
இதன் போது, கணனி மற்றும் பல்லூடக தொழிநுட்பவியலைப் பயன்படுத்தி, இலகு முறையில் கணித பாடம் போதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment