லண்டன்: பிரித்தானியாவில் பூங்காவிற்கு அருகில், ‘இது முஸ்லிம் பகுதி’ என்று குறிப்பிடப்பட்ட பலகை வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் உள்ள பார்ட்லெட் பூங்காவில் உள்ள பலகை ஒன்றில், ‘உங்கள் நாய்களை கொண்டு வராதீர்கள், முஸ்லீம்களுக்கு நாய்கள் பிடிக்காது, இது முஸ்லிம் பகுதி’ என எழுதப்பட்டுள்ளது.
இந்த பலகையில் உள்ள வார்த்தைகள் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அந்நகரத்தின் மேயருக்கு பாராளுமன்ற உறுப்பினர் கடிதம் ஒன்று அனுப்பி இந்த சம்பவத்தை பற்றி விசாரிக்க கூறியுள்ளார்.
இந்த பலகையை வைத்தவர்கள் யார் என தெரியவில்லை என்றும், இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் எழுதியுள்ளார். மேலும் இது போன்ற குற்றங்களை தவிர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
உழைக்க வேண்டும் என்ற நோக்கத்திலில் உலகிலிருந்து பல இலட்சம் மக்கள் பிரித்தானிளயாவுக்குள் வந்து குடியேறி வாழ்ந்து வருகின்றனர். பிரித்தானியர்கள் மனிதர்களுக்கு அடுத்தாக நாய்களை மதிக்கின்றனர்.
ஓர் முஸ்லிம் நாட்டில் வாழும் ஓர் முஸ்லிம் அந்த நாட்டில் அவனுக்குப் பெற முடியாத உரிமைகளை பிரித்தானியா வழங்கி வருகிறது.
இந்நிலையில், இவ்வாறான துவேசத்தனமான வார்த்தை விளம்பரங்களை ஏற்படுத்துவது, பல்லின மக்கள் வாழும் பிரித்தானியாவில் முஸ்லிகள் மீது காழ்ப்புணர்ச்சியை அதிகரிக்க வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை!
Published by


Leave a comment