லண்டன்: புகழ்பெற்ற லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறும் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 4வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து இங்கையை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
இதற்கிணங்க திலகரட்ன டில்சான் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரின் சிறப்பான இணைப்பாட்டத்தின் மூலம் இலங்கை அணி ஓர் வலுவான நிலையில் இருந்தது. எனினும் டில்சான் ஆட்மிழந்தார்.
இன்றைய போட்டியில் குமார் சங்கக்கார தனது 19வது சதத்தைக் கடந்தார். இதில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் தனது கன்னிச் சதத்தையும் பெற்று தனது திறமையை உலகுக்குப் பறைசாட்டினார் குமார் சங்கக்கார.
Published by


Leave a comment