இலங்கை அணிக்கு இன்று முக்கியமான போட்டி

cricketலண்டன்: இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று புகழ்பெற்ற லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை அணி இங்கிலாந்துடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அனைத்து துறைகளிலும் மோசமாக ஆடிய நிலையில் தொடர் தோல்வியை தவிர்க்கும் இலக்குடனேயே இன்று களமிறங்குகிறது.

ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றிருப்பதால் அது நான்காவது போட்டியிலும் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.

எனினும் இங்கிலாந்தின் சீரற்ற காலநிலையும் போட்டிகளில் அதிக தாக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டி லோட்ஸ் அரங்கில் இடம் பெறவுள்ளதால் இலங்கை தனக்கு சாதகமாக அமைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. லோட்ஸ் அரங்கு துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக செயற்படு கின்றமை குறிப்பிடத்தக்கது. இன்றைய காலநிலை மழையற்றதாக இருக்குமென இங்கிலாந்து வானிலை கூறியிருக்கின்றது.

cricket

இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் கடந்த போட்டி களில் இலங்கை அணிக்கு சவாலாக இருந்துவந்தார்.

எனவே இன்றைய போட்டியில் அவரை சமாளிக்க இலங்கை வீரர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். மறுபுறத்தில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் பொறுப்புடன் செயற்பட்டால் இங்கிலாந்து அணிக்கு இலகுவாக சவால் விடுக்க முடியும்.

lords[1]
லண்டன் லோர்ட்ஸ் கிரிக்கட் மைதானம்

Published by

Leave a comment