நாளை இடம்பெறும் ஏறாவூர் நகரசபையின் மாதாந்த அமர்வை எதிர்க்கிறார் நகரசபை உறுப்பினர் பெரோஸ்
ஏறாவூர்: நகரசபையின் கட்டளைச் சட்டம் 25 (1) யின் பிரகாரம் சபைக் கூட்டத்தினை அச்சபையினுடைய அலுவலகத்திதான் நடாத்த வேண்டும். மாறாக ஏறாவூர் நகரசபையின் முப்பதெட்டாவது சபை அமர்வு மேற்படி இடத்தில நடைபெறவிருப்பதாக இசபையின் செயலாளரால் கையெழுத்திட்டு நேற்றைய தினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சபையின் கூட்ட அழைப்பிதல், அலுவலக விடுமுறை நாட்கள் தவிர்ந்தமூன்று நாட்களுக்கு முன்னதாக அனுப்பப்படவேண்டும் .
ஆனால் நாளை (29-05-2014) நடைபெறவுள்ள சபையின் அமர்வுக்கான அழைப்புக்கடிதம் 21-05-2014 திகதியிடப்பட்டு ( 27-05-2014 ) நேற்றயதினம்தான் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி , அதே தினத்தில், அதே நேரத்தில் ஏறாவூர் நகரசபையின் உத்தியோகத்தர் நலன்புரி சங்க வருடாந்த ஒன்று கூடலும், பிரியாவிடை வைபவமும் நடத்துவதற்கான அழைப்பிதழும் நகரசபையின் செயலாளரினால் கையொப்பம் இடப்பட்டு அனுப்பப் பட்டுள்ளது.
கடந்தகால, நிகழ்கால சபை நடவடிக்கைகளையும்,செயற்பாடுகளையும் நோக்குகின்றபோது இதன் பின்னணியில் எனக்கு பாரிய சந்தேகம் நிலவுகின்றது.
எனவே நாளை நடைபெறவுள்ள கூட்டத்தை இரத்து செய்து, நகரசபையிலேயே இக்கூட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுராட்சி ஆணையாளரையும், உதவி உள்ளுராட்சி ஆணையாளரையும் கேட்டுள்ளதாக கௌரவ நகரசபை உறுப்பினர் பெரோஸ் தெரிவித்தார்.
Leave a comment