காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலக தொழில் உருவாக்கம், மேம்படுத்தல் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவினால் க.பொ.த. சா/தர, க.பொ.த. உ/தர மாணவர்களுக்காக தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில் வழிகாட்டல் செயலமர்வின் ஓர் அங்கமாக காத்தான்குடி மட்/அல்-ஹிறா மகா வித்தியாலய மாணவர்களுக்காக
‘நாளை தினத்தை வெற்றி கொள்ள இலகு வழியில் ஆங்கிலம் கற்றல்’ என்ற வாசகத்தின் கீழ் வழிகாட்டல் செயலமர்வு ஒன்று 26.05.2014 திங்கள்கிழமை வித்தியாலய உப அதிபர் MHM. அலியார் ஆசிரியரின் தலைமையில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் MTM.அஸ்மி தாஜூதீன், அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் Easy way to learn English என்ற தலைப்பில் city&Guilds ,ICTA நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு Nenasala நிறுவனத்தினால் நாடு பூராகவும் தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் E-Learning Software அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
விரிவுரையினை காத்தான்குடி Nenasala நிறுவனத்தின் முகாமையாளரும் காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருமான AGM .பஹ்மி B.Sc அவர்களினால் நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் AR. சைனுத்தீன், UL.அப்துர் ரஹ்மான ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Published by




Leave a comment