றியாத்: றியாத் நகருக்கு அருகாமையிலுள்ள பாலைவனத்தில் நிர்வாணமாக்கப்பட்டு, தலையில் காயங்களுக்குள்ளான நிலையில் பிலிப்பைன் நாட்டைச்சேர்ந்த இளைஞர் ஒருவரது சடலத்தை றியாத் பொலிஸார் கடந்த 16ம் திகதி கண்டெடுத்துள்ளனர்.
குறித்த நபர், ஆடைகள் களையப்பட்ட நிலையில், தலையில் பலத்த அடி காயங்களுடன், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓர் இளைஞர் குழுவால் கொல்லப்பட்டிருப்பதாக றியாத் பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
றியாத் நகரின் பிரபல்யமான பதா மோல் வர்த்தக நிலையத்தில் தொழில் புரிந்த மரியோ எனும் பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த இளைஞர், இம்மாதம் 12ம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்ததாக அவரது நண்பர்கள் பொலிஸாருக்குத் தெரிவித்திருந்தனர்.
இவரது உடல் தற்பொழுது மேலதிக பரிசோதனைக்காக றியாத் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதுடன், பொலிஸார் சந்தேக நபர்களைத் தேடிவருகின்றனர்.
Published by

Leave a comment