காத்தான்குடி: காத்தான்குடி -05 ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயளினால் சிறப்பாக நடாத்தப்பட்டுவரும் ஜாமிஉல்ழாபிரீன் பகுதி நேர அல்குர்ஆன் மத்ரசாவில் 3 மாதங்களுக்கு ஒரு தடவை திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக பரிசு வழங்கும் தொடர் நிகழ்வு 23-05-2014 இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயளில் இடம்பெற்றது.
ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயளின் தலைவர் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் ஜேபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைகளின் தலைவர் காழி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) கலந்து கொண்டார்.
இதன் போது 1 வருட காலத்தில் அல்குர்ஆனில் 9 ஜூஸ்களை மனனமிட்ட மாணவர்களும், 6 மாதத்தில் அல்குர்ஆனில் 5 ஜூஸ்களை மனனமிட்ட மாணவர்களும், வரவு நாட்களில் விடுமுறை எடுக்காமல் மத்ரசாவுக்கு வருகைதந்த மாணவர்களும் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு ஜாமிஉல்ழாபிரீன் பகுதி நேர அல்குர்ஆன் மத்ரசா மாணவர்களினால் அழகான முறையில் அல்குர்ஆன் கிராஅத் ஓதப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கவிமனி எம்.எச்.எம்.புகாரி பலாஹி,ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி அமீன் பலாஹி,ஜாமிஉல்ழாபிரீன் பகுதி நேர அல்குர்ஆன் மத்ரசா விரிவுரையாளர் மௌலவி எம்.பி.எம்.பாஹிம் (பலாஹி), ஜாமிஉல்ழாபிரீன் பகுதி நேர அல் குர் ஆண் மத்ரசா பொறுப்பதிகாரி அல்ஹாபிழ் றிஸ்வி உட்பட உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள்,பள்ளிவாயல் நிர்வாகிகள்,மத்ரசா மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இம் மத்ரசாவில் ஓதும் மாணவர்கள் பாடசாலை கல்வியோடு பகுதி நேரமாக அல்குர்ஆனை மனனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by





Leave a comment