ஆசிரியர் முஹம்மது இப்றாஹீம் சமாதான நீதிவானாக சத்தியப்பிரமானம்

ibrahim– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி -4 சேர் ராசிக் பரீட் மாவத்தையில் வசிக்கும் ஆசிரியர் அல்ஹாஜ் எம்.எம்.எச்.முஹம்மது இப்றாஹீம் (BCom, PGDE) அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாக வலயத்துக்கான சமாதான நீதிவானாக மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

இவர் மட்- காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை உயர்தரப் பிரிவு ஆசிரியராகவும், பகுதித் தலைவராகவும் கடமையாற்றிவருவதுடன் மேலும் பல்வேறு சமூக சமய அமைப்புக்களின் பொறுப்பாளராகவும்,செயலாளராகவும், செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் தங்கல்ல கடை முஸ்தபா ஹாஜியார்,ஹாஜியானி ஹலீமா உம்மா ஆகியோரின் கனிஷ்ட புதல்வருமாவார்.

ibrahim

Published by

Leave a comment