கிண்ணியா: 2013 ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட கிண்ணியா இடிமன் பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் நேற்று மாலை இடிமன் நூறுள்ளஹ் ஜூம்ஆப் பள்ளியில் இடம்பெற்ற நிகழ்வின் போது பாரட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வு கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது. குறித்த பரிசளிப்பு நிகழ்வினை ரி. ஹாலித் ஏற்பாடு செய்தார்.
இந்நிகழ்வுக்கு பள்ளி நிருவாகமும் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தன. நிகழ்வில் நகரபிதாவினால் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இங்கு நகரபிதா, பள்ளி நிருவாகம் சார்பானவர்கள், அப்பிரதேச பொது மக்களென ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Published by



Leave a comment