காத்தான்குடி நகரசபைக்கு சொந்தமான இரண்டு கழிவகற்றும் உழவு இயங்திரங்கள் தடுத்து வைப்பு

tractor– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி நகரசபைக்கு சொந்தமான இரண்டு கழிவகற்றும் உழவு இயங்திரங்கள் மட்டக்களப்பு மாநகர சபையின் கீழுள்ள திருப்பெருந்துறை களஞ்சியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகரில் நேற்று 20 செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மாநகரசபையின் குப்பை கொட்டும் மையமான திருப்பெருந்துறையில் அழிப்பதற்காக சென்றபோது, பொதுசுகாதார பரிசோதகர்களுக்கும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்குமிடையே ஏற்பட்ட கருத்துமுரண்பாடுகளையடுத்தே குறித்த வாகனங்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளரிடம் கேட்டபோது காத்தான்குடி பொது சுகாதார பரிசோதகர்கள் உரியமுறையில் இவ்விடயத்தை கையாளவில்லை என தெரிவித்தார்.

tractor

tractor

Published by

Leave a comment