5 கோடி 37 இட்சம் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளை கடத்தி வந்த இரு இலங்கையர்கள் கைது!

130217132602_gold_bars_304x171_reuters[1]கொழும்பு: 5 கோடி 37 இட்சம் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளை கடத்தி வந்த இரு இலங்கையர்கள் நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்த 7.1 கிலோகிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் மீட்கப்பட்டன. இவற்றில் 71 தங்க பிஸ்கட்டுகள் அடங்குவதோடு, 3.644 கிலோ கிராம் எடையுள்ள நகைகளும் அவற்றிடையே காணப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

யூ. எல். 226 விமானத்தில் காலை 5.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி பயணிகள் சுங்க அதிகாரிகளினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதன் போதே தங்க பிஸ்கட்டுகளும் நகைகளும் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. கல்குளேட்டர் பெட்டிகளுக்குள் (கணிப்பொறி) மறைத்து எடுத்து வரப்பட்ட நிலையிலே இவை கண்டு பிடிக்கப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் சுங்க அத்தியட்சகர் சுதத் சில்வா, பிரதி சுங்க அத்தியட்சகர் சாந்தபிரிய. உதவி அத்தியட்சகர் உபுல் கோணவல அடங்கலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மைக் காலமாக வெளிநாடுகளுக்கு தங்க பிஸ்கட்டுகள். நகைகள் கடந்தப்படுவது அதிகரித்து வருவதோடு, இது தொடர்பில் சுங்கப் பிரிவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினமும் 24 தங்க கட்டிகள் மீட்கப்பட்டன.

Published by

Leave a comment