மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டதனை அடுத்து தாயகத்தின் அபிவிருத்தியிலும் இனம்சார் பன்மைத்துவம்,சமய இன மற்றும் சமூக பிரச்சினைகளை கையாளுதல்,பிரச்சினைகளுக்கான அகிம்சை வழித்தீர்வு, சமய வித்தியாசங்களை மதித்தல், இன ரீதியான வித்தியாசங்களுக்கு ஏற்புடைமை அளித்தல் போன்ற உயர் எண்னங்களை கருத்திற் கொண்டு எமது அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தை அதன் சேவை எல்லையின் பரப்பாக கொண்டு தற்போது செயற்பட்டு வருகின்றது.
எமது அமைப்பில் அங்கம் வகிக்கும் ஊடகவியலாளர்கள், தாய் நாட்டின் அமைதிக்கும் அதன் ஒற்றுமைக்குமாக எமது மக்களின் உரிமைகளை அகிம்சைவழியில் தீர்வுகானும் நோக்கில் செயற்பட்டு வருகின்றனர்.
தாய் நாட்டின் மீது விசுவாசமும் அக்கரையும் கொண்ட நாம் தாயகத்தின் அபிவிருத்தியில் ஒரு பங்காளியாகவே எமது அமைப்பை நடாத்தி வருகின்றோம்.
வருகின்ற சவால்களை பேனா முனையில் உடைத்தெறிந்து ‘சமாதானம்’ என்ற அந்த வெண்புறாவை எம்மை சூழவுள்ள பல தரப்பட்ட சமூகத்தவர்களிடம் நிலை நிறுத்தி ஒற்றுமை பட்டவர்களாக நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆகையினால் எமது முதல் முயற்சி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்,சிங்கள,முஸ்லிம் ஊடகவியலாளர்களின் விபர கோவையினை நூல் வடிவில் வெளியிடுவதாகும் இது எதிர் காலத்தில் இன நல்லினக்கத்திற்கும் மட்டு மாவட்ட அபிவிருத்திக்கும் உதவும் இந்நூல் மட்டு மாவட்டத்தில் வதியும் ஒவ்வொரு பொது மகனுக்கும் உதவும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை .
ஏனெனில் ஒவ்வொரு ஊடகவியலாளனும் உங்கள் வீட்டு பிள்ளை அவன் எவ்வினத்தை சார்ந்தவனாக இருத்தாலும் சரியே என்பதனை உணர்த்து பொது மக்கள் அனைவரும் எம்மால் முன்வைக்கப்படும் சமுக நல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தர வேன்டும் என வேண்டிக்கொள்கின்றோம்.
ஊடகவியலாளர்கள்களின் கவனத்திற்கு!
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்,சிங்கள,முஸ்லிம் ஊடகவியலாளர்களின் விபர கோவையினை நூல் வடிவில் வெளியிடுவதற்கான முயற்சியில் எமது அமைப்பு ஈடுபட்டுள்ளது அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால்
அனைத்து ஊடகவியலாளர்களும் நாம் கோரியுள்ள ஊடகவியலாளர்களின் விபரம் திரட்டு படிவத்திற்கமைவாகமுழுப்பெயபர்,முகவரி,தபால் குறீயிடு,தே.அ.அ.இல, பிறந்த திகதி,கையடக்க தொலை பேசி இல, பெக்ஸ் இல,வீட்டு தொலைபேசி இல, ஈ-மெயில் முகவரி, இணையத்தளம்,பேஸ்புக்,ஸ்கைப் ,ஊடகத்துறையில் நுழைந்த வருடம், பணிபுரியும் ஊடகங்கள்,பிரதேச செயலகப்பிரிவு, கிராம சேவகர் பிரிவு போன்ற உங்கள் விபரங்கள் அடங்கிய கோவையினை எம்.ரீ.எம்.பாரிஸ் செயலாளர் மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம்,இளைஞர் கழக வீதி,பதுரியா நகர்,ஓட்டமாவடி என்ற முகவரிக்கு தபால் மூலமாகவும்,இ-மெயில் மூலமாக அனுப்பி வைப்பதாயின் bdmmf.sri@gmail.com என்ற முகவரிகளுக்கு அனுப்பி வைக்கு மாறும் மேலதிக விபரங்களுக்கு 0778327822 -0777916028 தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார்.
Published by

Leave a comment