காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் 20-05-2014 இன்று செவ்வாய்கிழமை காலை முதல் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வர்த்தக நிலையமொன்றிலிருந்து 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் றபீக் தெரிவித்தார்.
இதில் காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த நிலையிலுள்ள பெருமளவிலான அரிசி, கடலை, பொதியிடப்பட்ட உணவுப்பொருட்கள் ,மாவு ,ஜேம் ,பயறு ,பால்மா வகைகள், கருவாடு ,கொத்தமல்லி, வெள்ளைப்பூடு உட்பட பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இன்று இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்பு காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீனின் வழிகாட்டலில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment