காத்தான்குடி பிரதேச செயலக நடமாடும் சேவை – 22-05-2014

DS Office 3– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனையின் கீழ் கிராம சேவகர் பிரிவு தோறும் நடாத்தப்படும் நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பின்வரும் கிராம சேவகர் பிரிவுகளுக்கான நடமாடும் சேவைகள் 22-05-2014 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெறும்.

· 164 கிராம சேவகர் பிரிவு

· 164A கிராம சேவகர் பிரிவு

· 164B கிராம சேவகர் பிரிவு

· 164C கிராம சேவகர் பிரிவு

· 165D கிராம சேவகர் பிரிவு

ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்காக பின்வரும் சேவைகளை உள்ளடக்கியதாக நடைபெறவுள்ளது.

– பிறப்பு இறப்பு, திருமண பதிவுகள் வழங்குதல்

– தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல்

– முதியோர் அடையாள அட்டை வழங்குதல்

– காணிப்பிரச்சினைக்கான தீர்வுகள்

– சமூர்த்தி பிரிவின் சேவைகள்

– இலவச கண் பரிசோதனை

– ஆயுர்வேத வைத்திய சேவைகள்

– இலங்கை மின்சார சபையின் சேவைகள்

– தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சேவைகள்

– வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் வெளிநாட்டில் பணி புரிபவர்களை பதிவு செய்தல்.

DS Office 3

Published by

Leave a comment