‘மாயமான மலேசிய விமானம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது’: மஹதிர் முகம்மத்

plane– S-90

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எங்கோ உள்ளது. ஆனால் அது குறித்த தகவலை சி.ஐ.ஏ மற்றும் போயிங் நிறுவனம் மறைக்கிறது என்று முன்னாள் மலேசிய பிரதமர் மஹதிர் முகம்மத் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH. 370 மாயமானது.

பின்னர் அது இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து முன்னாள் மலேசிய பிரதமர் மஹதிர் முகம்மத்  கூறியிருப்பதாவது,

மாயமான விமானம் எங்கோ உள்ளது. அதன் மீதுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் என்ற பெயர் இல்லாமல் இருக்கலாம்.

விமானம் எங்கோ உள்ள நிலையில் அதன் பாகங்களை கருப்புப் பெட்டியில் இருந்து வரும் சிக்னல் கிடைத்த இடத்தில் தேடுவது நேரம் மற்றும் பணத்தை வீணாக்கும் செயல்.

விமானங்கள் திடீர் என்று மாயமாகாது. அதுவும் தொலைத்தொடர்பு சிஸ்டம்கள், ரேடியோ மற்றும் சட்டிலைட் என்று அதிநவீன கருவிகள் உள்ள காலத்தில் மாயமாவது சாத்தியம் அல்ல.

போயிங் நிறுவனம் மற்றும் சிஐஏ எதையோ மறைக்கிறது. ஏதோ காரணத்திற்காக போயிங் மற்றும் சிஐஏ ஆகியவற்றின் தொடர்பு குறித்து மீடியாக்கள் எதுவும் வாய் திறக்க மாட்டேன் என்கின்றன.

விமானத்தில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை போயிங் நிறுவனம் தான் பொருத்தியுள்ளது. அவை செயல் இழந்தாலோ, செயல் இழக்கச் செய்யப்பட்டாலோ அது எப்படி நடந்திருக்கும் என்பது போயிங் நிறுவனத்திற்கு கண்டிப்பாகத் தெரியும்.

விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றிருந்தால் தூரத்தில் இருந்து கொண்டே ரேடியோ அல்லது சட்டிலைட் தொடர்புகள் மூலம் சிஐஏ போன்ற அரசு ஏஜென்சிகள் அதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்க முடியும் என்று மஹதிர் முகம்மத் தெரிவித்துள்ளார்.

 

 

 

Published by

Leave a comment