ரியாத்: சவுதி அரேபியாவின் பாடசாலைகளில் மாணவிகள் விளையாட அமலில் இருந்த தடை ததற்பொழுது நீக்கப் பட்டுள்ளது.முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு பெண்களின் ஓட்டம், பாடசாலைகளில் மாணவிகள் விளையாட போன்ற பல தடைகள் உள்ளன.
மாணவிகள் விளையாடுவதற்கு தடை விதிக்கப் பட்டிருப்பதற்கு பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து சில தனியார் பாடசாலைகளில் மாணவிகளை விளையாட அனுமதித்தது. தனியார் பாடசாலைகளைத் தொடர்ந்து அங்குள்ள அரசு பாடசாலைகளில் படிக்கும் மாணவிகளும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம் என உத்தரவிடப்பட்டது.
தடை நீக்கப் பட்டதையடுத்து கடந்த வாரம் ஜித்தாவில் நடந்த கைப்பந்து போட்டியில் மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
இந்நிலையில் தற்பொழுது அரசாங்க பாடசாலைகளில் கூடைப்பந்து, டென்னிஸ், ஹொக்கி போன்ற விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment