கொழும்பு: மாணவர்களிடையே போஷாக்கை வளர்க்கும் பொருட்டு மூலிகைக் கஞ்சி வழங்கும் திட்டமொன்றை கல்விச் சேவைகள் அமைச்சு நடைமுறைப்படு த்தவுள்ளது. இதனடிப்படையில் நாளாந்தம் மாணவர் களுக்கு ஒரு கோப்பை மூலிகைக் கஞ்சி வழங்கப்படும்.
போஷாக்கு பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர் வரவை அதிகரித்தல், சிறந்த உணவுப் பழக்க வழக்கங் களையும், சுகாதாரப் பழக்க வழக்கங்க ளையும் உருவாக்குதல், உணவுக் கலாசாரத்தைக் கட்டி எழுப்புதல் மூலம் சிறந்த பிரஜையை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரு கிறது.
போஷாக்குக்குப் பொறுப்பான ஆசிரியரின் கண்காணிப்பின் கீழ் பாடசாலையிலேயே மருந்து மூலிகைகளைக் கொண்ட கஞ்சி தயாரிக்கப்டும்.
பாரம்பரிய அரிசியும் இதற்கு பாவிக்கப்படும். கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கா தலைமையில் நாளை 21 ஆம் திகதி காலை கல்விச் சேவைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த வைபவம் நடைபெறும்.
ஜனாதிபதி செயலக போஷாக்கு இணைப்பாளர் டொக்டர் லலித் சந்திரதாசவும் இதில் பங்கு பற்றுவார்.
Published by


Leave a comment