லண்டன்: இங்கிலாந்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கை கிரிக்கட் அணி, நாளை செவ்வாய்க்கிழமை தனது புதிய இருபது20 அணியுடன் இங்கிலாந்து இளம் அணியை சந்திக்க இருக்கின்றது.
ஒரு இருபது20 போட்டி, ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இவ்விரு அணிகளும் விளையாட இருக்கின்றன.
இவ்விரு அணிகளுக்குமிடையிலான இருபது20 போட்டி நாளை உள்ளுர் நேரப்படி மாலை 6மணிக்கு (இலங்கை நேரம் இரவு 10:30) புகழ்பெற்ற லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.
உலகக் கிண்ண நடப்பு சம்பியனான இலங்கை அணி, குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோரின் இருபது20 போட்டி ஓய்விற்குப் பின்னர், லசித் மலிங்கவின் தலைமையில் களமிறங்குகிறது.
கடந்த உலகக் கிண்ண தோல்வியின் பின்னர் இளம் அணியொன்றுடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.
இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி இதே மைதானத்தில் வியாழக்கிழமை (22/05/2014) பகலிரவு போட்டியாக இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment