மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் 17-இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு விஜயம் செய்தார்.
அங்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் போது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.எம்.அப்துல்லாஹ்,மேலதிக நீதவான் ஏ.எம்.எம்.ரியால்,மட்டக்களப்பு சட்ட மன்ற தலைவர் வினோபா இந்திரன்,செயலாளர் ஆர்.கண்ணன் உட்பட நீதிமன்ற அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து குறைபாடுகளையும்,அவசிய தேவைகளையும் பற்றி அறிந்துகொண்டதுடன் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இதில் நீதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரும் கலந்து கொண்டார்.
Published by



Leave a comment