அதே ஊர் ..
அதே ஆலமரம் ..
காகங்கள்
குயில் வேஷமும்.
நரிகள்
நாய் வேஷமும் போட்டன.
மீண்டும்
பாட்டி வருவாள்
வடை சுடுவாள் என்று …
ஆனால் அங்கே
ஒரே ஒரு கழுகு மட்டும்
பூனை வேஷம் போடலாயிற்று !
வடை சுட்டுச் சுட்டு
வயிறேரிந்து போனதால் …
இம்முறை
ஆயா வந்தால்
அப்பம் சுட்டால் !
கழுகு வந்தது
கவ்விச்சென்றது …
காகங்களும் நரிகளும்
கைசேதப்பட்டன !!!
![Crow-and-Fox[1] vadai](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/05/crow-and-fox1-vadai.jpg?w=105&h=150)
![Crow-and-Fox[1] vadai](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/05/crow-and-fox1-vadai.jpg?w=250&h=354)
Leave a comment