ஏவிய ஒருசில விநாடிகளில் நடுவானில் வெடித்துச் சிதறிய ரஷ்ய செயற்கைக் கோள்!

rocket– அபூஸைனப்

மொஸ்கோ: ரஷ்யாவில் ரொக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ‘ஏ.எம்.4 பி’ என்ற அதி நவீன செயற்கைக் கோள் வானிலேயே வெடித்து சிதறிய நிகழ்வு விஞ்ஞானிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

ரஷ்யா ‘ஏ.எம்.4 பி’ என்ற அதிநவீன தகவல் தொடர்பு செயற்கை கோளை ரொக்கெட் மூலம் நேற்று விண்ணில் செலுத்தியது. கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் இருந்து அந்த ரொக்கெட் புறப்பட்டது.

புறப்பட்ட 545 வினாடிகளில் நடுவானில் வெடித்து சிதறியது. இதனால் கரும்புகையுடன் தீப்பிழம்பாக எரிந்து மீண்டும் பூமியில் வந்து விழுந்தது.இக்காட்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.

இந்த செயற்கைகோள் ரூ.175 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. ரொக்கெட்டின் புரோடான் கட்டுப்பாட்டு என்ஜினில் ஏற்பட்ட கோளாறே இச்சம்பவத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

rocket

Published by

Leave a comment